பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/226

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

அகநானூறு -களிற்றியானைநிரை


ஆண் பன்றி ஒன்றைக் கொன்று, விரைவாக அதனை இழுத்துச் சென்றது. அதனால் வழிப் புறத்திலே ஒழுகிய குருதியினைப் பருகிய எருவையின் சிவந்த செவிகள், மிக்க போர்க்களப் பரப்பிலே வீரர்களது மருமத்துப் புண்களை ஆராயும் இராப்பொழுதிலே கைக்கொண்ட விளக்குகளைப் போன்று தோன்றும். வானைத் தழுவும் விளக்கத்தையுடைய, அத்தகைய மலையினைக் கடந்தும், பொருள் ஈட்டச் சென்றனர் நம் தலைவர். அவர் விரைந்து வருவார் தோழி!

சொற்பொருள்: 1. கறுத்தோர் - பகைவர். ஏஅச் சொல் கொடுஞ் சொல், ஏச்சு, 5. அலந்தலை - காய்ந்த தலை. ஒடைக்குன்றம் - ஒடைமரக் குன்றமும் ஆம், 7.மம்மர் - மயக்கம். 8. ஒய்களிறு - இளைத்த களிறு, 9. தொகுசொல் - தொகுத்த புகழ்ச்சொற்கள். கோடியர் - கூறுவோர். தூம்பு - முழக்கும் கொம்பு போன்ற வாத்தியம். 13. எல்லி - இரா. 15. பிறங்கல் - விளக்கம்

உள்ளுறை: சிலம்பியின் அசையும் கூட்டினை மேகமெனக் கருதிய யானைத்திரள் போலப், பொருளல்லவற்றைப் பொருளாகக் கருதி காடுபல கடந்து இளைத்தனர் தலைவர்; அதனால் அவர் விரைவிலே வருவர் என்றனள்.

112. பெண்கோள் ஒழுக்கம்!

பாடியவர்: நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார். திணை: குறிஞ்சி. துறை: இரவுக்குறி வந்த தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லி, வரைவுகடாயது.

(இரவுக்குறியிலே இடர்ப்பாடுகள் பல உள்ளன. நின் பால் பெருங்காதல் உடைய தலைவியோ, நீ அதனைக் கடந்து வருவதனால் வரும் ஏதங்களை நினைந்து நினைந்து வருந்துகிறாள். ஆகவே, விரைந்து வந்து, மணந்து கொள்வாயாக" என்கிறாள்.) -

          கூனல் எண்கின் குறுநடைத் தொழுதி
          சிதலை செய்த செந்நிலைப் புற்றின்
          மண்புனை நெடுங்கோடு உடைய வாங்கி,
          இரைநசைப் பரிக்கும் அரைநாட் கங்குல்
          ஈன்றுஅணி வயவுப்பிணப் பசித்தென மறப்புலி
          ஒளிறுஎந்து மருப்பின் களிறுஅட்டுக் குழுமும்
          பனிஇருஞ் சோலை எமியம் என்னாய்
          தீங்குசெய் தனையே, ஈங்குவந் தோயே;
          நாள் இடைப் படின்,என் தோழி வாழாள்;
          தோளிடை முயக்கம் நீயும் வெய்யை; 10