பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

அகநானூறு - களிற்றியானை நிரை


வேட்கையினையுடைய பெண்புலி, 6. குழுமும் முழங்கும். 10. வெய்யை - விரும்புவை. 11. கழியக் காதலர் - மிகுதியான காதலுடையவர். 14. கணக்கலை - கலைக்கணம். 17. பெண்கோள் ஒழுக்கம் - திருமண நிகழ்ச்சிகள். 'கழியக் காதலராயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்’ என்பது, புகழ்பற்றிப் பிறந்த பெருமிதம் என்பர் பேராசிரியர்.

உள்ளுறை: "கரடி புற்றினைச் சிதைத்து, உள்ளிருக்கும் புற்றாஞ்சோற்றை உண்ணலை விரும்பியே திரிந்து கொண்டிருந் தாற்போல, நீயும், இவள் குடிப்பெருமையைச் சிதைத்து இவளைக் களவிற்கூடி இன்புறுதலையே நாடினாய்’ என்றனள்.

113. செலீஇயர் என் உயிரே!

பாடியவர்: கல்லாடனார். திணை:பாலை, துறை: தலைமகன் பிரிவின்கண், தலைமகள் தோழிக்குச் சொல்லியது. சிறப்பு: பல்வேற் கோசரின் நன்னாடும், பாணன் என்பானின் நாடும்.

(தலைமகன் பிரிந்துபோக, வருந்திய தலைவியானவள், தன் உயிர்அவனை நோக்கிச்சென்றுவிடத் தன்னுடல் மட்டும் அங்கே அழாது கிடக்கும் எனப் புலம்புகின்றாள்.)

          நன்றுஅல் காலையும் நட்பின் கோடார்,
          சென்று வழிப்படுஉம் திரிபுஇல் சூழ்ச்சியிற்,
          புன்தலை மடப்பிடி அகவுநர் பெருமகன்
          அமர்வீசு வண்மகிழ் அஃதைப் போற்றிக்,
          காப்புக் கைந்நிறுத்த பல்வேற் கோசர் 5

          இளங்கள் கமழும் நெய்தல்அம் செறுவின்
          வளம்கெழு நன்னாடு அன்னஎன் தோள்மணந்து,
          அழுங்கன் மூதூர் அலர்எடுத்து அரற்ற,
          நல்காது துறந்த காதலர், "என்றும்
          கல்பொருஉ மெலியாப் பாடின் நோன்அடியன் 10

          அல்கு வன்சுரைப் பெய்த வல்சியர்
          இகந்தன ஆயினும், இடம்பார்த்துப் பகைவர்
          ஓம்பினர் உறையும் கூழ்கெழு குறும்பிற்
          குவைஇமில் விடைய வேற்றுஆ ஒய்யும்
          கனைஇருஞ் சுருணைக் கனிகாழ் நெடுவேல் 15

          விழவுஅயர்ந் தன்ன கொழும்பல் திற்றி
          எழர்அப் பாணன் நன்னாட்டு உம்பர்,
          நெறிசெல் வம்பலர்க் கொன்ற தெவ்வர்
          எறிபடை கழிஇய சேயரிச் சின்னி
          அறுதுறை அயிர்மணற் படுகரைப் போகிச், 20