பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/230

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

அகநானூறு - களிற்றியானை நிரை


பெயர்ந்துபோக எண்ணிய புலத்திடத்தினை நோக்கிப், பறவையானது புறப்பட்டுச் சென்றாற்போல, என்னுடலானது இவ்விடத்தே கிடந்து தனித்து ஒழியுமாறு கைவிட்டு, என் உயிரானது, அவர் வினைசெய்து கொண்டிருக்குமிடத்திற்கே புறப்பட்டுப் போவதாக! அதனால், யாம் அழாதே பொறுத்திருத்தலுக்கும் உரியவர் ஆவோமே!

சொற்பொருள்: 1. நன்றல்காலை - துயருற்ற காலை. 5. காப்புக்கை நிறுத்தல் பாதுகாவலாக வைத்துக் காத்தல். 6. நெய்தலம் செரு கடல் சார்ந்த நாடு. 8. அபங்கல் - ஆரவாரம். 11. சுரை மூங்கில்; சுரைக்குடுவையுமாம். 13. குறும்பு - சிறு காட்டரண். 15. சுருணை - பூண். 23. பராரை - பருத்த அரை. 24. குடம்பை - கூடு. - -

விளக்கம்: பாணன், தமிழ்நாட்டின் வடபாலிருந்த நாட்டின் தலைவன். இவன் வரலாறு பிற்சேர்க்கையில் காண்க. வாய்மை தவறாது நட்பினைப் பேணிக்காத்த கோசரைப்போலத், தலைவனும், நம் துயரத்து எல்லைக்கண் வந்து அருளாத தேனோ? என்பது குறிப்பு. அதனால், தன் உயிர் போய்விடும் என்றாள், பிரிவுத் துயரந் தாழாதாளாக

114. அணங்குசால் அரிவை!

பாடியவர்: ..... திணை: முல்லை. துறை: வினை முற்றி மீளும் தலைமகன், தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.

(வினை முடித்து ஊர் நோக்கித் திரும்பி வருபவனான தலைவன், தன் தேர்ப்பாகனை நோக்கித் தேரை விரையச் செலுத்த வேண்டுகிறான். தன்பால் ஊடல் கொண்டிருக்கும் தலைவியை மனக்கண்முன் கண்டு கூறி, விரைவுபடுத்துகிறான்)

          கேளாய், எல்ல! தோழி! வேலன்
          வெறிஅயர் களத்துச் சிறுபல தாஅய்
          விரவுவி உறைத்த ஈர்நறும் புறவின்,
          உரவுக்கதிர் மழுங்கிய கல்சேர் ஞாயிறு,
          அரவுதுங்கு மதியின், ஐயென மறையும் 5

          சிறுபுன் மாலையும் உள்ளார், அவர்என
          நப்புலந்து உறையும் எவ்வம், நீங்க
          நூல்அறி வலவ! கடவுமதி, உவக்காண்
          நெடுங்கொடி நுடங்கும் வான்தோய் புரிசை,
          யாமம் கொள்பவர் நாட்டிய நளிசுடர் 10

          வானக மீனின் விளங்கித் தோன்றும்,
          அருங்கடிக் காப்பின், அஞ்சுவரு மூதூர்த்
          திருநகர் அடங்கிய மாசுஇல் கற்பின்,