பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/236

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222

அகநானூறு -களிற்றியானை நிரை


          கொடுந்தாள் யாமை பார்ப்பொடு கவரும்
          பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
          வாணன் சிறுகுடி வடாஅது

தீம்நீர்க் கான்யாற்று அவிர் அறல் போன்றே!

முல்லையோடு சேர்ந்து மலர்ந்திருக்கும் கரிய கொத்தினையுடைய நொச்சியையும், அழகிய வரி பொருந்திய அல்குலினையுமுடைய தன் ஆயத்தினரையும், நினையாளாயினள்!

மயிர்ச்சாந்து பூசிய, வளைந்த கொத்தாகிய கூந்தலை வாரி, வகை வகையாக வகுத்து, யான் மலர்களை இணைக்கப் போக, அதற்கு உடன்பட்டுத், தகரச் சாந்தினைப் பூசிக் கொள்ளவும், மறுத்தனள். -

எவனோ ஒருவனின், பொய்ம்மையான சொற்களை நம்பி, அழகிய தொழில்நலம் வாய்ந்த, வளம் பொருந்திய, செல்வ மிக்க மாளிகையும் தனித்தொழியப் போயினள்.

அஞ்சத்தக்க கவர்த்த நெறிகளையுடைய அவ்விடங்களிலே, வெண்மையான தலையினையுடைய பருந்தானது, கரிய அடியினையுடைய ஒமை மரத்தின்மீது ஏறி, அருள் உண்டாகத் தன் பேடையைப் பலகால் அழைத்திருக்கும். பாழ்பட்ட நாட்டுப் பகுதியாகிய அவ்விடங்களிலே, பொற்றொடிகள் ஒலிக்கத் தன் கைகளை வீசியும், சிவந்த அடிகளிலே சிலம்புகள் ஒலிக்கவும், அவள் அசைந்தசைந்து சென்றனள். அத்தகைய என் மகளுக்கு,

தன்னையே ஒப்பான தகைமையையும் விருப்பத்தினையு முடைய அவள் காதலன், மணம் கமழும் பல மலர்களைத் தலையிலே சூடுவதற்கு, அவள் தலையைப் பின்னிவிட, அதுதான், - -

நெடிய அடியினையுடைய மாமரத்தினது, முறையாக முற்றி விழுந்த ஒளியுடைய பழத்தினை, வளைந்த காலினையுடையயாமையானது, தன் பார்ப்போடு அமர்ந்துண்ணும் அத்தகைய பொய்கைகள் சூழ்ந்த, என்றும் பொய்யாத புதுவருவாய்களையுடைய, பண்ணனது சிறுகுடி என்னும் ஊர்க்கு வடக்கின் கண்ணுள்ள, இனிய நீரினையுடைய காட்டாற்றின்கண் விளங்கும் அறல்போல, அவளுடைய பிடர் மறையுமாறு, நெறியுற்றுத் தொங்குகின்றவோ!

சொற்பொருள்: 1. மெளவல் - முல்லை. மாக்குரல் - கரிய கொத்து.2. அவ்வரி. அழகிய வரி. ஆயம் ஆயமகளிர்.4 திருநகர் - செல்வமிக்க மாளிகை, 8. தெளிர்ப்ப - ஒலிசெய்ய, 9. சிலம்புநக சிலம்பு முழங்க.10. வணர் குரல் - வளைந்த கூந்தல் 11 தாரம் - ஒரு வாசனைப் பொருள். 13. பின்னுவிட - பின்னிவிட 15. ஊழுறு