பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/242

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

228

அகநானூறு - களிற்றியானை நிரை



அகநானூற்றைத் தொகுத்தவர்கள் எத்துணை நுட்பமாகச் செய்யுட்களை ஆய்ந்து தேர்ந்து நிரற்பட வைத்துள்ளனர் என்றறிவதற்கும் இஃது ஒரு நல்ல சான்றாகும்.

சுறாமீன்.எதிர்பட்டுத் தாக்குதலாலே, தனக்கு இயல்பான செலவினின்றும் மெலிவுற்றுத் தளர்ந்த கோவேறு கழுதை யானது, கழியிடத்துத் தங்கினாற் போல,

நீதான் எதிர்ப்பட்டதனாலே, தலைவியும் தனக்கே இயல்பாகப் பெற்றிருந்த நாணம் முதலான பெண்மைக் குணங்கள் எல்லாமும் தன்னிடத்திருந்தே நீங்கிப்போக, நின் வழியினளே ஆகினாள் என்று, தோழி, இறைச்சியாற் கூறுகின்ற நயத்தையும் அறிந்து இன்புறலாம்.

'அன்றில் அகவும் ஆங்கண்' எனத் தன்னது ஊரிலுள்ள இடத்தைச் சுட்டியது, அதுதான் தன் பெடையை அழைய நிற்கும் அத் தன்மை போல, நீதானும், நினக்காகக் காத்திருப்பாளான தலைவியை விரும்பிச் சென்று மகிழ்விப்பாயாக என்று உரைத்ததாகும்.

இது, நெய்தலிற் களவு ஆதலால், களவு உறவு எல்லாத் திணைகளினும் நிகழ்தலுறும் என்பதும் அறியப்படும்.

நெய்தற்கு எற்பாடு வந்ததற்கு வைகுறு விடியல் மருதம்: எற்பாடு செய்தல் ஆதன் மெய் பெறத் தோன்றும் என்னும் சூத்திர உரையினும்

'இரவிலும் பகலிலும் நீவரல் என்றதும்’ என்பதன் மேற்கோளாக, வல்வில் இளையரோடு எல்லிச் செல்வது நாட்டே' என்பதனையும்,

'தேரும், யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்தனர் இயங்கலும் உரிய' என்பதற்கு, கழிச்சுறா வெறிந்த புட்டாள் அத்திரி என்பதனையும்,

நச்சினார்க்கினியர் எடுத்துக் காட்டுவனவும் இச் செய்யுளின் சிறப்பைக் காட்டுவனவாம்.

              அகநானூறு களிற்றியானை நிரையும்
          புலியூர்க் கேசிகன் உரையும் முற்றுப்பெற்றன.