பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 11


உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்,
மாய்த்த போல மழுகுதுனை தோற்றி,
பாத்தி யன்ன குடுமிக் கூர்ங்கல்,
விரல்நுதி சிதைக்கும் நிரைநிலை அதர,
பரல்முரம்பு ஆகிய பயம்இல் கானம் 15

இறப்ப எண்ணுதிர் ஆயின் - 'அறத்தாறு
அன்று' என மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன ஆக என்னுநள் போல,
முன்னம் காட்டி, முகத்தின் உரையா
ஒவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி 20

பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு,
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை, மாமலர்
மணிஉரு இழந்த அணியழி தோற்றம் 25

கண்டே கடிந்தனம், செலவே - ஒண்டொட
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ, பிரிதும்நாம் எனினே!


கொஞ்சமே! நாம் அளிசெய்யும் நிலைமையையும் பொறாதவளாக, அதற்கு மாறுபட்ட முகத்தோற்றத்தினை உடையவளாயிருந்தனள். நாம் அழைத்த காலத்தும் அதனைக் கேளாதவள் போலிருந்தனள். அருகிலேயே நாமிருந்து தான் ஒரு தமியள்போலவே எண்ணினள். அழகு மிகுந்த அவளுடைய சிவந்த பாதங்கள் நிலத்தினை வடுப்படுத்துமாறு மெல்ல மெல்ல நடந்து, என் அருகேயும் வந்தனள். தன் கூர்மையான பற்கள் தோன்ற, வாடிய உள்ளத்திலே இருந்து எழுந்த வாய்மையற்ற போலிப் புன்முறுவலையும் செய்தனள். யாம் பிரிந்து செல்ல எண்ணியதைப் பற்றிய ஒரு முடிவினை, நாமே உணர்வதற்கு முன்னரே, ஒள்ளிய நுதலினையுடைய அவள், நாம் வினையின்கண் ஈடுபடுதல் கூடாது என்ற எண்ணத்துடனேயே, அவ்வாறு எல்லாம் ஆயினள்.

பட்டுப்போன ஓமை மரங்களையுடைய பழைமையான அழகிய காட்டிலே, பளிங்குகளைப் போன்று விளங்கும் நெல்லி மரத்தின் பல காய்கள், உயர்ந்த பெரிய பாறைகளின் மேலாகச் சிறுவர்கள் வட்டாடச் சேர்த்துவைத்த கழங்குகளைப் போல, உதிர்ந்து கிடக்கும், கதிரவன் எரிபரப்பும் அத்தகைய மலைச்சாரல் அது. தீட்டி வைத்தவை போலத் தேய்ந்த தம் முனைகளுடன் விளங்கும், பகுத்து வைத்த குடுமிகளைப் போன்ற கூர்மையான கற்கள், அவ்வழி நடப்பவரின் விரல் முனைகளைச்-