பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/256

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

அகநானூறு - களிற்றியானை நிரை


இறையனாரகப் பொருளுக்குச் சிறந்த உரை வகுத்தவர். வடமொழி தமிழினும் சிறப்புடையது என்று சொன்ன குயக்கொண்டானை இறக்கப் பாடிய தமிழ்ப் பற்று உடையவர். மதுரையிலே, இன்றும் நக்கீரர் கோயிலொன்று உள்ளது. அது சங்கத்தார் கோயில் எனவும் வழங்கும். கைலைபாதி, காளத்திபாதி அந்தாதி, ஈங்கோய்மலை எழுபது போன்ற பதினோராந் திருமுறை நூற்களைப் பாடியவர் வேறு ஒருவர். ‘உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை வாய் மொழிக் கபிலன் (அகம், 78) எனக் கபிலரை மனமுவந்து பாடிய இவர், அவர் காலத்தவர்.

நல்லாவூர்க் கிழார் (86)

ஊர் பற்றி வந்த பெயர் இது. இவர் வேளாண் மரபினர். தமிழகத்தின் பண்டைய திருமணமரபு எப்படி இருந்தது என்பதற்கு நல்ல விளக்கம் இவருடைய பாடல். நல்லாவூர் பாண்டிநாட்டுள் ஒர் ஊர். இப்பாடலைத் தமிழ் மணம் வேண்டுவார் ஒவ்வொருவரும் படிக்க வேண்டும். ‘ஓர் இற்கூடி உடன்புணர் கங்குல் நிகழ்ச்சி, வளமான நற்றிணை 154ஆவது செய்யுள்.

நல்வெள்ளியார் (32)

இவரோர் பெண்பாற் புலவர். மதுரை நல்வெள்ளியார் எனவும் கூறப் பெறுவர். "தலைவன் புரவலனைப் போலத் தோன்றி, இரவலனைப்போலப் பணிமொழி பேசினான்’ என இவர் இப்பாடலுள் உரைக்கும் நயம் காண்க; சிறந்த காதல் நாடகம் இச் செய்யுள்.

நன்பலூர்ச் சிறுமேதாவியார் (94)

அகநானூற்றுள் 94, 394 ஆகிய பாடல்களைப் பாடியவர். நன்பலூர் இவர் ஊர். சிறு மேதாவியார் இவர் பெயர்; அல்லது அறிவுடைமை குறித்த சிறப்புப் பெயருமாகலாம். பாடல்கள் இரண்டும் முல்லைத்திணைப் பாடல்கள்."அன்பு கலந்து ஆர்வம் சிறந்த சாயல்"எனக் காதலியைக் காதலன் கூறுவதாக வரும் சொன்னயம் காண்க. பருவத்தால் இளமையும், அறிவால் முதுமையும் உடையவராதலின் 'சிறுமேதாவியார்’ எனப் பெற்றனர் போலும் பெண்களுள் இத்தகையினரைச் சிறுமுதுக் குறைவியர் என்பது இலக்கிய வழக்கு.

நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க் கிழார் (1.12)

இவர் வேறு; ஆவூர்க் கிழார் என்பார் வேறு. 'நெய்தற் சாய்த் துய்த்த' என்பது இவர் வாழ்வின் நிகழ்ச்சிளுள் ஒன்று. 'சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம், கழியக் காதலராயினும் விரும்பார் என்று கூறும் இவர், பெண் கோள் ஒழுக்கத்திலே