பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/257

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 243


உறுதியுடைவர் எனலாம். ஆகவே, தமிழகத்துள் களவுக் கூட்டத்தில் இளையோர் ஈடுபடுதலை ஏற்காத சிலரும் இருந்தனர் எனல் பொருந்தும்.

நொச்சி நியமங்கிழார் (52)

நியமம் பாண்டிய நாட்டு ஒரூர். இவர் வேளாண் மரபினர். இவர் பாடியன அக 1, நற் 3,'புறம் 1, ஆக ஐந்து பாடல்கள். வேங்கை மலரைப் பறிக்க இயலாத குறமகள் வேங்கை வேங்கை எனப் பூசலிட அதனைப் புலிபோலும் எனக் கருதிக் குன்றவர் வருவர் என்ற செய்தி நயமுடையது (அகம். 5). 'உயிரினும் சிறந்தது நாணம் (நற்.17) என இவர் கூறுவதும் காண்க. 'நொச்சி’ என்பது நொச்சிப்பூ மாலை சூடித் தம் மதிலைக் காக்கும் மறவனைக் கூறுவது. அத்தகைய வீரச் செயலாற்றியமைப்பற்றி இப்பெயர் பெற்றன போலும், நியமம் கோசர்களின் ஊர்களுள் ஒன்று. அவ்வூரினர் இவர் எனலும் பொருந்தும். இது ‘நெகமம்’ என வழங்கும்.

நோய்ப் பாடியார் (67)

நொய்ப்பாடியார் எனவும் கூறுவர். இவர் பாடியது இந்த ஒரே பாடல்தான். இதன்கண்,

'நல்லமர்க் கடந்த நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்தொறும் பீலி சூட்டிய பிறங்குநிலை நடுகல் வேலூன்று பலகை வேற்றுமுனை கடுக்கும்' என நடுகல் வழிபாட்டைத் திறம்படக் காட்டிக் கூறியுள்ளார். வேறு செய்திகள் தெரிந்திலது. பிரிவினால் வரும் நோயினைப் பாடியவராதலின், இப்பெயர் பெற்றவர் ஆகலாம்.

பரணர் (6, 62, 76, 116)

குறுந்தொகையுள் 17, நற்றிணையுள் 12, அகத்துள் 32, புறத்துள் 13 ஆகியவை இவர் பாடியன. பதிற்றுப்பத்துள் 5 ஆம் பத்துப் பாடியவர். இவராற் பாடப்பெற்றோர், கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன், சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி, சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி ஆகியோரும், மற்றும் பலரும் ஆவர். கபிலர் நக்கீரர் முதலியோரின் நண்பர்.இவர் வரலாறு மிகவும் விரிவானது.

பாண்டியன் அறிவுடை நம்பி (28)

பிசிராந்தையாரால் அரசநெறி உரைக்கப்பட்ட பாண்டியன் இவன். சிறந்த அறநெறியாளனாக இருந்தமையோடு புலவனாகவும்