பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/260

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

அகநானூறு -களிற்றியானை நிரை

பாடலும் இவர் பாடியவை. இப் பாடலைக் (SI) கடுகு பெருந்தேவனார் பாடியது எனவும் வேறு பாடம் கூறுவர்.

பேரி சாத்தனார் (38)

வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் என்றும், இவர் குறிப்பிடப் பெறுவர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை இவர் பாடியுள்ளார். இவர் பாடியவை குறு. 5, புற2, நற். 8, அகம் 4, ஆக இருபது பாடல்கள். சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழிச், சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை இவர் பாடியுள்ளனர். வண்ணக்கண் என்பது நாணயச்சாலை நோட்டக்காரன் என்ற அரசபதவியைக் குறிக்கும். அப்பதவி வகித்தவர் இவர் எனலாம். 'நீடிதழ் தலைஇய கவின்பெறு நீலம் கண்ணென மலர்ந்த சுனை என இவர் உரைத்தமையாலும், வடபுலத்தினராதலாலும் வடம வண்ணக்கண் என்றனர் எனலும் ஆம்

பொருந்தில் இளங்கீரனார் (39)

அகநானூற்றுள் இரண்டு பாடல்களும், புறநானூற்றுள் ஒரு பாடலும் பாடியவர்.புறநானூற்றுள் இவராற் பாடப்பெற்றோன் சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்பானாவன்.இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தவன் செறுத்த செய்யுட் செய் செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ எனக் கபிலரை மனதாரப் போற்றியவர் இவர். நக்கீரனார் போன்று இவரும் கீரர் குலத்தவராயிருத்தல் கூடும். பொருந்தில் ஒர் ஊர். இந்தச் சேரமான் சிலப்பதிகாரத்துட் பராசரன் என்பானுக்குப் பரிசு வழங்கியவன் எனக் காணுகின்றோம். திருச்சி மாவட்டத்துப் 'பொருந்தலூர் பொருந்திலாக இருக்கலாம் எனக் கருதலாம். 'இளங்கீரனார்' என்ற பெயருடன் மற்றொருவரும் உள்ளனர். அவர், அகத்துள் 9, குறுந்தொகையுள் 1, நற்றிணையுள் 5, ஆக 15 பாடல்கள் பாடியவர். அவர் எயினந்தை மகனார்.அவரினின்றும் வேறுபடுத்தவே, இவரைப் பொருந்தில் இளங்கீரனார் என்றனராகலாம்.

போந்தைப் பசலையார் (110)

புகார்த் தெய்வத்தை நோக்கிப் பெண்கள் சூள் உரைக்கும் வழக்கம் இப்பாடலுள் காணப்படுகின்றது. காதலன் செயலெல்லாம் தன் கண்ணுள்ளேயே நிற்கின்றதென்று கூறும், காதலியின் மனோபாவம் சிந்திக்கச் சுவையுடையது. இவர் ஒர் பெண்பாற் புலவர். போந்தை - பனங்குருத்து. அங்ஙனம் பிரிவாற்றாமையினால் பசலையுண்ணப்பட்டவர் இவர் என்க.