பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 247


மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் (33)

அகநானூற்றுள் 7, குறுந்தொகையுள் 2, நற்றிணையுள் 2, புறநானூற்றுள் 388-வது பாடல் ஆக 12 பாடல்கள் இவர் பாடியவை. மள்ளனார் என்பதனால் இவர் படைவீரருள் ஒருவர் என்பது விளங்கும். அது புலப்படப் போர்க்கள வெற்றியை இவர் சிறப்பித்துப் பாடியுள்ளனர். சிறுகுடி கிழான் பண்ணனையும் இவர் பாடியுள்ளனர்.


"நாளது செலவும், மூப்பினது வரவும்
அரிதுபெரு சிறப்பிற் காமத்து இயற்கையும்

என்று இவர் பிரிந்துறை வாழ்வார் கூறுவதாகக் கூறும் பகுதி மிகவும் நயமுடையதாகும். 'கடவுட் கற்பின்மடவோள்' எனப் பெண்மையை வியந்து போற்றுபவர் இவர். 'முகவாய் திறந்த நகைவாய் முல்லை’ என்றாற்போல் - நயமிக்க உவமைகள் பலவற்றையும் இவர் பாடல்களுட் காணலாம்.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (56)

மதுரையிலே ஆடைவிற்கும் தொழில் செய்து வந்தவர் இவர். அகநானூற்றுள் 6, குறு, 1, நற். 4, புறநா, 1 ஆக இவர் பாடியவை 12 பாடல்கள். உள்ளத்து உணர்வுகள் பலவும் திறம் படக் கூறப்படும் செய்யுள் நயத்தினை இவர் பாடல்களுட்காணலாம்.

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் (102)

சேந்தன் - தந்தை பெயர். கூத்தனார் இவர் பெயர். இவர் பாடியவை இந்தப் பாடலும், அகநானூற்று 348-வது பாடலுமாகும். குறிஞ்சி பாடுவதிலே வல்லவர் இவர். குறிஞ்சிப் பண்பாடுவதனை இதன்கண் இவர் குறித்துள்ளனர். இவர் பாடியவை, அகநானூற்றுள் 2-ம், நற்றிணையுள் ஒன்றுமாகும். மதுரைப் பாலாசிரியர் எனவும் இவர் குறிக்கப் பெறுவர்.

மதுரை எழுத்தாளனார் (84) -

இவர் பாடியது இந்த ஒரே பாடல்தான்.இதனைய்ேசேந்தம் பூதனார் பாடியது எனவும் கொள்வர் சிலர். இது முல்லைத் திணைப் பாடலாகும். இதன்கண் இவர் கூறும் அரசின் போர்மறம் தனி நயம் உடையதாகும்.

மதுரை கணக்காயனார் (27)

அகத்துள் மூன்று பாடல்களும், நற்றினையுள் ஒன்றும், புறத்துள் ஒன்றும் இவர் பாடியவை. இவர் மகனாரே நக்கீரனார். 'கணக்காயர்’ என்பது ஆசிரியத் தொழிலாகும். பாண்டியர்களின் சிறப்பு இவர் பாடல்களில் மிளிரும் பசும் பூட் பாண்டியன் பொறையன், சோழன் ஆகியோரையும் இவர்