பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ★ 255


பெரிதாயிற்று. தனக்காக உயிர்நீத்த எயினனது மகளிர்களின் கொடுமையைக் கண்டும், இரக்கமற்றவனாக நன்னன் இருந்து விட்டான். அப்போது, அம் மகளிர்களின் துயரைக் களைய முன்வந்ததுடன் மிஞிரிலியையும் அடக்கிய அருள் உள்ளம் உடையவன் இவன்.

மீண்டும் இவனுக்கு ஆபத்து நேர்ந்தபோது, இவனுக்குத் துணை நின்று, இவனை அரண்மிக்க இடத்திலே வைத்துக் காத்தவர் கோசர்கள். இந்நூலுள் இதனைக் குறிப்பவை, 76, 113, செய்யுட்கள் ஆகும். 76-வது பாடலுள், அஃதை தன் நாளோலக்கத்திலே வரும் பரிசிலர்களுக்குக் களிற்றோடு நன்கலனும் வழங்கும் சிறப்பைப் பரணர் கூறுகிறார். அஃதையைக் கோசர்கள் காத்த செய்தியை 13-வது பாடலுள், கல்லாடனார் குறிப்பிடுகிறார்.

அஞ்சி (அதியமான்) (115)

இவன் தகடூரிலிருந்து அரசாண்டவன். வள்ளல்களுள் ஒருவன். ஒளவையாருக்குக் கருநெல்லிக்கனி அளித்த சிறப்பினன். மலையமானோடு பகைகொண்டு வாழ்ந்தவன். சேரர்களுக்கும் இவனுக்கும் பகை அதிகமாக, இறுதியிலே, தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையால் அழிவு எய்தினான். இவன் மகன் பொகுட்டு எழினி, தகடூர்ப்போர் தகடூர் யாத்திரை என்று வியந்து பாடப் பெற்றது. அது முற்றவும் இப்போது கிடைத்திலது. இவன் வரலாறு விரிவானது.

அத்தி (44)

இவன் சேரர் குடியினருள் ஒருவன். சேரர் படையணிகளிலே பங்குகொண்டு பணியாற்றியவன். ஆதி மந்தியாரை மணந்து, கழாஅர்த் துறைக்கண், காவிரிப் புதுப்புனலில் நீராடும்போது, வெள்ளத்தால் ஈர்க்கப்பெற்றுச் சென்று, பின் மீண்டவன். இவன் மனைவி இவனைத் தேடிப்புலம்பிய பாடல்கள் மிகவும் உருக்கம் உடையனவாகும். பின்னர், கரிகால் வளவனோடு கழுமலப் போரிலே சேரர் படைத் தலைவனாக இருந்து போரிட்டு இறந்தவன். ஆடற்றொழிலில் வல்லவனாதலின், 'ஆட்டனத்தி' எனவும் அழைக்கப் பெறுவான்.

ஆதிமந்தியார் (45, 76)

இவர் சோழ நாட்டு உறையூரினர். அத்தி என்னும் ஆடல் வல்லோனான சேரர்குல மறவனை மணந்தார். காவிரிப் புதுவெள்ளத்து நீராடுகையில், அவன் வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டான். அவனுக்காகக் கதறியவராகக் காவிரிக்கரை வழியாக அவனைத்தேடிப் புலம்பி ஓடினார் இவர். இறுதியில்,