பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/274

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

260

அகநானூறு -களிற்றியானை நிரை


போரிட்டவன் மற்றொரு திதியன். அவர்களுள் வேறான இவன் பொதியில் திதியன் என்பவனாவான். இவன் சிறந்த வள்ளலாவான். 'பாணர் ஆர்ப்பப் பல்கலம் உதவி, நாளவை இருந்த நனைமகிழ் திதியன்' என இவனைப் போற்றுவர் மாமூலனார். இப்பாடலுள் கூறப்படும் திதியன் வேறு எனவும் சிலர் கூறுவர். அகம் 36-ல் கூறப்படும் சினங்கெழு திதியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிலே அழிந்தவன். அவனே இவன் எனவும் உரைப்பர். இவன் சிறந்த போராற்றல் உடையவன். பொதியில் ஆய்வேளுக்கு உரியது; இவன் அவன் மரபினன் போலும்!

தித்தன் (6)

இவன் சோழ மன்னர்களுள் ஒருவன். உறையூரிலிருந்து அரசாண்டவன். சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என்பானின் தந்தை. தந்தைக்கும் மகனுக்கும் மிக்க பகைமை நிலவி வந்தது. மகன் முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது வென்ற காலத்துத் தித்தன் பாராட்டாத வருத்தம் புலப்பட, அவனைச் சாத்தந்தையார் என்பார் பாடியுள்ளனர் (புறம் 80). நக்கீரனாரும் இவனைப் பற்றிப் புறம் 395-ல் போற்றியுள்ளனர். இவன் மகள் ஐயை என்பவள். அவள் மிகவும் சிறப்புடன் விளங்கினாள் என்பது, 'ஐயை தந்தை' என இவனைச் சிறப்பித்ததனால் புலனாகும்.

திரையன் (85)

வேங்கட நாடாண்ட பெருமையுடையவன் இவன். காஞ்சியிலிருந்து அரசாண்டவன். பட்டினப்பாலை பாடிய பெரும்புலவரான கடியலூர் உருத்திரங்கண்ணனார் இவனையும் பாடியுள்ளனர். அதனால், இவன் திருமாவளவன் காலத்தவனாகலாம். இவனே தொண்டைமான் இளந்திரையன் என்ற சிறப்புடன், பெரும்பாணாற்றுப் படைக்குரிய பாட்டுடைத் தலைவனாகவும் திகழ்ந்தவன். இவனுடைய விரிவான சிறப்புக்களை எல்லாம் அதன்கண் காணலாம். சோழனுக்கும் பீலிவளை என்னும் நாகர்குலக் கன்னிக்கும் பிறந்தவன் இவன் என்பர். 'இளந்திரையம்' என்றொரு நூல் இவனால் இயற்றப்பெற்றதென இறையனாரகப் பொருளுரை கூறும் அதியமானுக்காக ஒளவை தூதுரைத்துச் சென்ற தொண்டைமானும் இவனே யாவன்.

நன்னன் - 1 (15, 97)

இவன் பாழிமலைக்குத் தலைவனான பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னனாவன். பாழி, பாரம், பிரம்பு, நவிரம் என்னும் மலைகளுக்கு உரியவன். இவனுடைய பாழி நகரிலே பெருஞ்செல்வத்தை வேளிர்கள்