பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

262

அகநானூறு - களிற்றியானைநிரை


என்பர். வேளாண்மைத் தொழில் பூண்டு வாழ்ந்த இவன் அதே சமயத்திலே வள்ளலாகவும் வீரனாகவும் திகழ்ந்தான். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனே இப்பண்ணனைப் பாராட்டிப் பாடியுள்ளான் என்றால், இவன் பெருமையை எங்ஙனம் கூறமுடியும்! அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், மாற்றூர்கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் ஆகியோரும் இவனைப் பாடியோராவர்.

பண்ணி (கோடைப் பொருநன்) (13)

மதுரை மாவட்டத்துக் கோடைக்கானல் மலையைச் சார்ந்த சிறு பகுதியை ஆண்டவன் இவன். இவனுடைய கோநகர் கடியம் என்பது. இவனை வேட்டுவன் எனவும், கடிய நெடு வேட்டுவன் எனவும் புலவர் போற்றுவர். இவனைப் பாடியவர் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவராவர். இவர் ஆவூர் மூலங்கிழாரின் மகனார். இவன் பாண்டியர் படைத்தலைவருள் ஒருவன். யானைகளைப் பிடித்துப் பழக்கி அவற்றை ஏவி நடத்தும் ஆற்றல் உடையவன். பெருந்தலைச் சாத்தனாரை இவன் மதியாது நடத்த, அவர் இவனைக் கடிந்து உரைத்த புறப்பாட்டு, இவன் முதலில் புலவர்களை மதியாது, பின் மனம் மாறியவன் என உணர்த்தும். இவன், ‘பயம்கெழு’ வேள்வி இயற்றியதாகவும் இப்பாட்டுக் கூறுகிறது; அது களவேள்வியாகலாம்.

பழையன் (44)

மோகூர்ப் பழையன் என்று அழைக்கப்பெறுபவன் ஒருவன். அவன் பாண்டியர்களின் படைத்தலைவர்களுள் ஒருவனாகிய பழையன் மாறன். கழுமலப் போரிலே சோழர்களின் படைத் தலைவர்களுள் ஒருவனாக விளங்கிய பழையன் ஒருவன்; அவனே இவன். கழுமலப் போரிலே, நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை ஆகிய சேரர் படைத்தலைவர்களை வென்று, களத்திலே பட்டவன் இவன். இவன் பட்டதனால் சோழன் ஆத்திரங்கொண்டு போரிட்டுக் களத்திலே வெற்றிபெற்றனன்.

பாணன் (113)

தமிழகத்து வடவெல்லைப் பகுதியிலே, ‘வாழ்ந்தவன் இவன். மற்போர் வல்லவனாக விளங்கினான். தன் மற்போர் வல்லமையைக் காட்டத் தமிழகத்துக்கு வந்தான். கணையன் என்பானின் ஆதரவிலே தங்கியிருந்த ஆரியப் பொருநனை மற்போரிலே கொன்று வென்றவன் இவன். பின்னர், சோழனாகிய தித்தனை வெல்ல முயன்று அவனுடைய ஆற்றலை உணர்ந்ததும் பின்வாங்கிச் சென்றவன் இவன். இவன் நாடு வளம் மிக்கது. 'விழவயர்ந்தன்ன கொழும்பல் திற்றி எழாஅப் பாணன்