பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 17


பன்மைநோக்கிப் பன்மை கூறப்பெற்றது. 3. படால் - படாதே கொள். 4. முதுபதி - பழம்பதி பெயரும் ஆம். 5. பூண்டி - பூண்டாய்; “சின் அசை, 8. சுடர் - விளக்கு, 9. தன் சிதைவு - தன் குற்றம், இன்சிலை - இனிய சிலைப்பு.10 நாறு உயிர் - தோன்றும் உயிர்ப்பு:12, தொலைவு-தோல்வி.15. வழிவழி ஒடி - அவர் சென்ற வழியெல்லாம் தொடர்ந்து ஓடி 19, ஒலித்தல் - தழைத்தல். செயலை - அசோகு, 20 கலை - முசு, குரங்கு 21. துய் - ஆர்க்கு.

விளக்கம்: 'செவிலித் தாயார் கானவர் மகளைக் கண்டு அவளிடம் வினவியது இது என, இதனை நச்சினார்க்கினியர் குறித்துள்ளனர். வலை கண்ட மான், அதனுட்பட விரும்பாது விரையக் கடந்து போவதுபோல, இற்செறிப்பிற்கு உட்பட்டு நலிய விரும்பாதகானவர் மகளும்,உடன்போக்கிலேஈடுபட்டனள். "கானவர் மகள் என்றது, மானோடு அடைவுபடுத்திக் கூறியது.

8. கங்குலும் அரிய அல்ல!

பாடியவர்: பெருங்குன்றுர் கிழார். திணை: குறிஞ்சி துறை : தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது.

(தலைவி, தலைவன் மேல் உள்ளங்கலந்த காதல் உடையவள். அவனைக் கணமும் பிரியப் பொறுக்காதவள். அவள் மனம் தமக்குள் விரைந்து மணவினை நிகழ்வதை விரும்புகிறது. இரவுக்குறியிடத்தே அவனைத் தேடி வந்தவள், அவ்வருகையின் அருமை புலப்படக் கூறித் தலைவனின் உள்ளத்தைத் திருமண ஏற்பாட்டிலே திருப்ப முயலுகின்றனள்.)

          ஈயற் புற்றத்து ஈர்ம்புறத்து இறுத்த
          குரும்பி வல்சிப் பெருங்கை ஏற்றைத்
          தூங்குதோல் துதிய வள்உகிர் கதுவலின்,
          பாம்பு மதன்அழியும் பானாட் கங்குலும்,
          அரிய அல்ல-மன் - இகுளை! பெரிய 5

          கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றைப்
          பலாவமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
          கழைநரல் சிலம்பின் ஆங்கண், வழையொடு
          வாழை ஓங்கிய தாழ்கண் அசும்பில்,
          படுகடுங் களிற்றின் வருத்தம் சொலியப் 10

          பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்
          விண்தோய் விடரகத்து இயம்பும் அவர்நாட்டு,
          எண்ணரும் பிறங்கல் மானதர் மயங்காது,
          மின்னுவிடச் சிறிய ஒதுங்கி, மென்மெலத்
          துளிதலைத் தலைஇய மணியேர் ஐம்பால் 15