பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

அகநானூறு - களிற்றியானை நிரை



          சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ
          நெறிகெட விலக்கிய, நீயிர், இச்சுரம்
          அறிதலும் அறிதிரோ?. என்னுநர்ப் பெறினே.

தோழி! பிளந்த வாயினையுடைய ஆண்புலி ஒன்று, பெரிய பன்றியினைக் கொன்று வீழ்த்தியது. பலாமரங்கள் செறிந்த பக்கமலைச் சாரலில், எங்கும் புலால் நாற்றம் எடுக்க, அதனை இழுத்துச் சென்றது. அப்படிப் புலி செல்லுகின்ற, மூங்கில்கள் தம்முள் உரசி உரசி ஒலிசெய்கின்ற, மலை அது. அவ்விடத்திலே, சுரபுன்னையோடு வாழை மரங்களும் ஓங்கி வளர்ந்துள்ள பகுதி ஒன்று. அவ்விடத்தே, பள்ளமான நீர் அறாத ஒரு குழியிலே, கடுமையான இயல்பினையுடைய களிற்றியானை ஒன்று வீழ்ந்துபட்டது. அதன் வருத்தத்தைத் தீர்க்கும் பொருட்டாக அதனுடைய பிடியானையானது, பெரிய பெரிய மரங்களைக் குழியினின்றும் களிறு ஏறி வருவதற்கு ஏற்றபடியாக, முறித்து முறித்துப் போட்டது. அப்போது எழுந்த மரம் முறிபடும் ஒசையானது, விண்ணைத் தழுவ விளங்கும் அம்மலையின் குகைகளில் எல்லாம் எதிரொலித்தது. அத்தகையதான அவருடைய மலைநாட்டிலே, எண்ணற்கும் அரியவான மான்களின் செலவினால் ஏற்பட்ட காலடித்தடம் பதிந்து விளங்கும் கவறுபட்ட வழிகளுள் சென்று, யாம் மயங்கவில்லை. மின்னல் வழிகாட்டச், சிறுகச் சிறுக நடந்தோம். மெல்ல மெல்ல வந்து சேர்ந்தோம். இவ்விடத்து, "மழைத் துளிகளைத் தம்மிடத்தே கொண்ட, நீலமணி போலும் அழகிய, ஐவகையாக முடிக்கப்பெற்ற கூந்தலை, நும்பிடரியானது மறையுமாறு பின்புறமாக வாரி முடித்து, முடித்த அத் தொகுதியைப் பிழிந்து கொண்டே வருபவரே! முறையற்ற வகையிலே வழிகள் பின்னிக் கிடக்கும் இச்சுரத்தின்கண் வருவதற்குரிய நேரிய வழியினை நீவிர் இதற்குமுன்பே அறியவும் அறிவீரோ” என்று, நம்மீது பரிவுடன் கேட்கும் அன்புடையாரை மட்டும் யாம் பெற்றோமில்லை. பெற்றோமானால்,

"ஈயல்களையுடைய புற்றுக்களின் குளிர்ந்த மேற்புறத்தே தங்கிய புற்றாஞ் சோறாகிய இறையினைப், பெரிய கையினையுடைய ஆண் கரடியானது எடுக்கும்; அப்போது, அதன் தொங்கும் தோல் உரைக்குள் பொருந்தியிருக்கும் கூர்மையான ந்கங்கள் பற்றிக்கொள்ளுவதனால் அப்புற்றினுள்ளே இருக்கும் பாம்பும் தனது வலிமை அழிந்துபோம். அத்தகைய, இம் மழைக்காலத்து நள்ளிரவும், காட்டு வழியும், நமக்குக் கடந்து வருதற்குக்கூட அரியதன்று.

சொற்பொருள்: 3. துதிய உகிர் - உறைபுக்க நகம். 4. பானாள் - பாதிநாளாகிய இரவு, நள்ளிரவும் ஆம். 6. ஏற்றை - புலி ஏறு.