பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/39

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 25


சொரிந்து, அழுதலைப் பொருந்தாவாகும்; யான் துயிலவும் பெறுவேன்!

சொற்பொருள்: 2. சிவத்தல் - கோபித்தல். உருப்பு - வெப்பம் 4. ஆயம் - மகளிர் கூட்டம். 5. சுடர் - நெடுங்கொடி - விளக்கின் நெடிய வரிசை. 7, கம்மென - விரைய, 12 நிகர் - ஒளி.

12. இருதலைப் புள்ளின் ஓர் உயிர்!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: பகற்குறிவாரா நின்ற தலைமகன், தோழியால் செறிப்பு அறிவுறுக்கப்பட்டு, 'இரவுக்குறிவாரா வரைவல்' என்றாற்கு, அதுவும் மறுத்து, வரைவு கடாயது. -

(ஒத்த மனம் உடையவரான இரு காதலர்கள், தம்முள் கண்டு காதலித்துக் களவு ஒழுக்கத்திலும் ஈடுபட்டிருந்தனர். தினை முற்றிவிட, அவள் புனங்காவலுக்கு வருவதும் நின்றது. அவளின் பருவ மலர்ச்சியை உணர்ந்த பெற்றோர், இற் செறிப்புச் செய்தனர். பகலிலே, அவர்கள் சந்திக்கும் இடத்திலே, அவன் வந்து ஆர்வத்துடன் காத்திருந்தான். தலைவியினுடைய தோழி வந்து, தலைவி இற்செறிக்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றாள். அவன், இரவிலே வந்து சந்திக்க விரும்புகிறான். அவள் அதனையும் மறுத்துத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறாள்.)

          யாயே, கண்ணி னும்கடுங் காதலளே
          எந்தையும், நிலன்உரப் பொறாஅன்; ‘சீறடி சிவப்ப,
          எவன்,இல! குறுமகள்! இயங்குதி என்னும்;
          யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
          இருதலைப் புள்ளின் ஓர்உயிரம்மே; 5

          ஏனல்அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
          கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை
          விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,
          குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
          வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம் 10

          புலிசெத்து, வெரீஇய புகர்முக வேழம்,
          மழைபடு சிலம்பில் கழைபடப் பெயரும்
          நல்வரை நாட! நீவரின்,
          மெல்லியல் ஒரும் தான் வாழலளே!

எம்தாயிருக்கின்றனளே, அவள் தன் கண்களினுங்காட்டில் இவள்மீது பெருங்காதல் செலுத்துகின்ற இயல்பினள். தந்தையும், இவள் தரையிலே அடிபொருந்தி நடக்க நேரினும், உள்ளம் பொறுக்காதவன்.இவள் நடப்பதைக் காணின், ஏடிஎம்