பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/43

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 29


காலத்தன்மை. 18. அழல் நுதி - அழற்கோடு. தோகை . நெற்றோடு; கடைகூர்த்துச் சிவந்திருத்தலினால் அவ்வாறு கூறினர்.

விளக்கம்: கூதிர்க் காலத்திலே, பிரிவின் வேதனை மிகுதியினால் அவள் பெரிதும் துயருற்று நலிவாள்; அதனால் அவள் நின் போக்கை நிறுத்துக என்று கூறியதாம். அன்றி, பிரிவுக்கு உடம்பட்டதாயின், அக்காலத்துக் கொடுமையைக் கூறி, அதற்குள் தவறாது வருக என்றதாகும்.

முத்தாரமும் சந்தின் ஆரமும் அணிந்த பாண்டியனைக் கூறியது முத்தாரமும் சந்தின் தொய்யிலும் விளங்கும் அவளுடைய மார்பகத்தையும் உணர்த்தும். 'தென்னவன் மறவன் என்பதனைத் தென்னவனாகிய மறவன் எனவும் கூட்டிப் பொருள் கொள்வர். பிரிந்து உறையின் நோய் இன்றாகச் செய்பொருள்!' என்றது, அஃது வாய்ப்பதாகாது என்னும் உட்கருத்து உடைய சொற்களாகும். விளைவயலின் பயனான நெற்கதிர்களைத் துவளச் செய்வது போலப், பனிக்காலம் அவளையும் துவளச் செய்யும், நீர்ப் பறவையான குருகும் குளிர் தாங்காது ஒலிக்குமாயின் அவள் புலம்பாது என் செய்வாள்? உவமைகளை இவ்வாறெல்லாம் பொருத்திக் காணுக.

14. யாங்கு ஆகுவம் கொல்?

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தனார். திணை: முல்லை. துறை: பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

(தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் வரவேண்டிய நாள். அவள், அவன் வரவை எதிர்பார்த்து ஏங்கி வாயிலிலே நிலையாக நின்றனள். மாலைக் காலமும் மெல்லப் போய்க் கொண்டிருந்தது. இன்று மாலை அவர் வாரார் போலும்; காலையில் வருவார்’ என்றனன் பாணன். மாலை வேளையிலே வர நினையா தவரானால் காலையிலே யாம் என்ன கதியாவோமோ? யாரறிவார்?' என்றாள் அவள். பாணன் பேச்சற்று நின்றுவிட்டான். 'கடவுளை வாழ்த்துவது ஒன்றுதான் அவனால் முடிந்தது. அவ்வேளை, தலைவனின் தேரும் வந்துவிட்டது. உள்ளம் கவர்ந்த அந்த இனிய காட்சியை, அப்பாணன், தன் தோழர்க்கு உவப்புடன் சொல்லுகின்றான்.)

          'அரக்கத்து அன்ன செந்நிலப் பெருவழி,
          காயாஞ் செம்மல் தாஅய், பலஉடன்
          ஈயல் மூதாய் வரிப்பப், பவளமொடு
          மணிமிடைந் தன்ன குன்றம் கவைஇய
          அம்காட்டு ஆர்இடை, மடப்பினை தழீஇத், 5