பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அகநானூறு - களிற்றியானை நிரை


          திரிமருப்பு இரலை புல்அருந்து உகள,
          முல்லை வியன்புலம் பரப்பிக் கோவலர்
          குறும்பொறை மருங்கின் நறும்பூ அயரப்,
          பதவு மேயல் அருந்து மதவுநடை நல்ஆன்
          வீங்குமாண் செருத்தல், தீம்பால் பிலிற்ற
          கன்றுபயிர் குரல, மன்றுநிறை புகுதரும்
          மாலையும் உள்ளார்.ஆயின், காலை
          யாங்கு ஆகுவம்கொல்? பாண!", என்ற
          மனையோள் சொல்எதிர் சொல்லல் செல்லேன்,
          செவ்வழி நல்யாழ் இசையினென், பையெனக15

          கடவுள் வாழ்த்திப், பையுள்மெய்ந் நிறுத்து,
          அவர்திறம் செல்வேன் கண்டனென், யானே-
          விடுவிசைக் குதிரை விலங்குபரி முடுகக்
          கல்பொருது இரங்கும் பல்ஆர் நேமிக்
          கார்மழை முழக்குஇசை கடுக்கும்,
          முனைநல் ஊரன், புனைநெடுந் தேரே! 2O

'செவ்வரக்கினைப் போன்று செந்நிலமாக விளங்குவது பெருவழி அங்கே, காயாவின் பூக்கள் பரவிக் கிடக்கும். தம்பலப் பூச்சிகள் பலவும் ஒருங்கே வரிசை வரிசையாக ஊர்ந்து கொண்டிருக்கும். அதன்கண் விளங்கும் குன்றம், பவளத்தோடு நீல மணியினைப் பொருத்தி வைத்தாற் போலத் தோன்றும். எங்கணும் இவ்வாறு சூழ்ந்து கிடக்கும் காட்டின் அகத்தேயுள்ள அரிய இடங்களில், மடப்பத்தினையுடைய தன் பெண்மானைத் தழுவிக் கொண்டதாக, இரும்பு திரித்துவிட்டாற்போல விளங்கும் கொம்புகளையுடைய ஆண்மானானது, புல்லைத் தின்றவாறு தாவித்தாவிச் செல்லும்,தம்முடைய பசுநிரைகளைக் கோவலர் முல்லை நிலத்திலே பரவி மேயவிட்டிருப்பர். அவர்கள் குன்றுகளின் பக்கத்தே நறுமணப் பூக்களை எடுத்து அணிந்தும் மகிழ்ந்திருப்பர். அறுகம் புல்லாகிய உணவினை அருந்திய, வலிய நடையினவான நல்ல பசுக்களின், பருத்த மாண்பினையுடைய மடிகள் இனிய பாலைச் சொரிந்து கொண்டிருக்கும். அவை, தம் கன்றுகளை நினைந்து அழைக்கும் குரலினவாக, மன்றுகளில் நிறையுமாறு வந்து சேர்ந்து கொண்டிருக்கும். இத்தகைய மாலைக் காலத்திலுங்கூட, எம் தலைவர் எம்மை நினையார் ஆயினர். அங்ஙனமாயின், நாளைக் காலை வேளைக்குள் யாம் எந்நிலை உறுவேமோ, பாணனே?” என்று, அவன் இல்லத்துத் தலைவியானவள் சொல்லினள்.

அதற்கு எதிராக எதுவும் சொல்லுவதற்கு இயலாதவனாயினேன். என் நல்ல யாழிலே செவ்வழிப் பண்ணினை மெல்லென இசைத்தேன். கடவுளைப் போற்றினேன். அவளுடைய