பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

அகநானூறு- களிற்றியானை நிரை


அவளைப் பேணி வளர்த்தசெவிலித்தாய் தாய்மையின் பாசமும், காதலின் சக்தியும் புலப்படத் தெளிவுபடுத்தும் பாடல் இது)

          வளம்கெழு. திருநகர்ப் பந்துசிறிது எறியினும்,
          இளந்துணை ஆயமொடு கழங்குஉடன் ஆடினும்,
          'உயங்கின்று, அன்னை என்மெய் என்று அசைஇ,
          மயங்கு வியர் பொறித்த நுதலள், தண்ணென,
          முயங்கினள் வதியும் மன்னே! இனியே, 5

          தொடிமாண் சுற்றமும் எம்மும் உள்ளாள்,
          நெடுமொழித் தந்தை அருங்கடி நீவி,
          நொதும லாளன் நெஞ்சு:அறப் பெற்றஎன்
          சிறுமுதுக் குறைவி சிலம்புஆர் சீறடி
          வல்லகொல், செல்லத் தாமே - கல்லென - 10

          ஊர்எழுந் தன்ன உருகெழு செலவின்,
          நீர்இல் அத்தத்து ஆர்இடை, மடுத்த,
          கொடுங்கோல் உமணர், பகடுதெழி தெள்விளி
          நெடும்பெருங் குன்றத்து இமிழ்கொள இயம்பும்,
          கடுங்கதிர் திருகிய வேய்பயில் பிறங்கல், 15

          பெருங்களிறு உரிஞ்சிய மண்அரை யாஅத்து
          அருஞ்சுரக் கவலைய அதர்படு மருங்கின்,
          நீள்அரை இலவத்து ஊழ்கழி பல்மலர்,
          விழவுத் தலைக்கொண்ட பழவிறல் மூதூர்,
          நெய்உமிழ் சுடரின் கால்பொரச் சில்கி, 2O

          வைகுறு மீனின் தோன்றும்
          மைபடு மாமலை விலங்கிய சுரனே!

செல்வம் பொருந்திய அழகிய மாளிகையிடத்தே, சிறிது நேரம் பந்து எறிந்து ஆடினாலும், தன்னொத்த தோழியராகிய இளையபெண்கள் கூட்டத்துடன் ஒருங்கிருந்து சிறிது நேரம் கழங்கு ஆடினாலும், 'அன்னாய்! என் உடல் தளர்கின்றது!' என்று கூறித் தளர்பவள் எம் மகள். வியர்வு அரும்பி நிறையும் நேறியினளாகத், தண்ணென்று எம் மேனி குளிர, வாஞ்சையுடன் அந்நிலையே வந்து எம்மைக் கட்டியும் கொள்பவள் அங்ஙனம் அவள் வாழ்ந்த மென்மையெல்லாம் கழிந்ததே!

இப்பொழுதோ, தொடியணிந்து மாட்சியுற்ற தன் தோழியரையும், எம்மையும் நினையாதவளாயினாள்! மிக்க புகழினை உடைய தந்தையின் கடத்தற்கரிய காவலினையும் எப்படியோ கடந்து சென்றாள்!

நீர்ப்பசையற்ற சுரங்களின் அரிய இடங்களிலே, கொடுமையான அடிக்குங் கோல்களையுடைய உப்புவாணிகர்,