பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 43



சொற்பொருள்: 1. அழுவம் - கடற்பரப்பு.4 செக்கர் - சிவந்த 16. கொட்கை - பரந்து திரிய விடுதல் 5-6, ஞாழலொடும் தாழையொடும் பிணித்த ஊசல் எனவும் கூறுவர். 11. கவ்வை நல்லணங்கு உறுதல் - அலராகிய பேய் பிடித்தல். இப்பர்டலுக்குப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது என வேறு பாடமும் உண்டு.

விளக்கம்: தலைவி தலைவனோடு பகற்குறியிடத்தே சந்திப்பதை அறிந்தபோதும், தோழி தாம் விளையாடுவதற் கெனவே வரவும், சிலர் அலர் உரைத்தனர். அவர், கொடிது அறி பெண்டிர் எனக் கூறும் சொல்நயம் உணர்க. எனினும், தலைவன், தலைவியின் களவுக் கூட்டத்தை அவள் தாய் அறிந்தனள் என உணர்வன்; உணர்ந்து, வந்து வரைந்து கொள்வன் என்பதும் கருத்தாகும். 'நல் அணங்கு என்றது, இகழ்ச்சிக் குறிப்பு.

21. எழு! இனி வாழி!

பாடியவர்: காவன் முல்லைப் பூதனார். திணை: பாலை. துறை: பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச்சுரத்து நின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது.

(ஒரு தலைவன், பொருளாசை மீதுற முன்னர் ஒரு முறை தொலைநாடு நோக்கிச் சென்றனன். அவனுள்ளத்தே மிக்கெழுந்து அவனைச் செல்லத்தூண்டிய அந்த ஆர்வம், நெடுங்காலத்து அவன் உள்ளத்திலே நிலைபெறவில்லை. இடைவழியிலேயே அந்த நினைவு ஒழிய, அவன் காதலியின் நினைவே மிகவும் அதிகமாயிற்று. அப்போது அவன், தன் நெஞ்சிற்குச் சொல்லியதாக அமைந்தது இது.)

          'மனைஇள நொச்சி மெளவல் வால்முகைத்
          துணை நிரைத்தன்ன; மாவீழ், வெண்பல்,
          அவ்வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
          தாழ்மென் கூந்தல், தடமென் பனைத்தோள்
          மடந்தை மாண்நலம் புலம்பச் சேய்நாட்டுச் 5

          செல்லல் என்றுயான் சொல்லவும், ஒல்லாய்
          வினைநயந்து அமைந்தனை ஆயினை, மனைநகப்
          பல்வேறு வெறுக்கை தருகம் - வல்லே,
          எழுஇனி, வாழி என் நெஞ்சே! - புரிஇணர்
          மெல்அவிழ் அம்சினை புலம்ப; வல்லோன் 10

          கோடுஅறை கொம்பின் வீஉகத் தீண்டி
          மராஅம் அலைத்த மணவாய்த் தென்றல்,