பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

அகநானூறு - களிற்றியானை நிரை


          சுரம்செல்மள்ளர் கரியல் தூற்றும்,
          என்றூழ் நின்ற புன்தலை வைப்பில்,
          பருந்து இளைப்படுஉம் பாறுதலை ஒமை 15

          இருங்கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட;
          மென்புனிற்று அம்பிணவு பசித்தெனப், பைங்கட்
          செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
          இரியற் பினவல் தீண்டலில், பரீஇச்
          செங்காய் உதிர்ந்த பைங்குலை ஈந்தின் 20

          பரல்மண் சுவல முரண்நிலம் உடைத்த
          வல்வாய்க் கணிச்சி, கூழார், கோவலர்
          ஊறாது இட்ட உவலைக் கூவல்,
          வெண்கோடு நயந்த அன்பில் கானவர்
          இகழ்ந்தியங்கு இயவின் அகழ்ந்தகுழி செத்து, 25

          இருங்களிற்று இனநிரை துர்க்கும்
          பெருங்கல் அத்தம் விலங்கிய காடே!

'வீட்டுத் தோட்டத்து இளைய நொச்சி மரத்திலேயுள்ள முல்லையின்கண் அரும்பியிருக்கின்ற, வண்டினம் விரும்பும் வெண்மையான முல்லையரும்புகளை, ஒத்தனவாக நிரைத்து வைத்தாற்போன்ற வெண்மையான பல்வரிசையினை உடையவள்; அழகியதாக அமைந்த வயிற்றினள்; அகன்ற அல்குல் தேரினையும் உடையவள்; ஒப்பனை செய்யப்பெற்றுத் தாழ்ந்து தொங்கும் மென்மையான கூந்தலினையும் உடையவள்; மென்மையான பருத்த மூங்கிலைப்போல விளங்கும் தோள்களையும் உடையவள்; தலைவி. இத்தகைய நம் தலைவியின் மாண்புற்ற நலன்கள் எல்லாம் வாடுமாறு, தொலைவிலேயுள்ள நாட்டினை நோக்கிச் செல்லவேண்டாம்' என்று யான் அன்றே சொல்லவும், அதற்கு இசையாய் ஆயினை! 'நம் மனைவியின் உள்ளம் களிப்புறும்படியாகப் பல்வேறு செல்வங்களையும் ஈட்டிக் கொணர்ந்து தருவோம்’ என, அன்று பிரிந்து செல்லும் செயலையே மிகவும் விரும்பி அமைந்தனை. அஃது உண்மையானால், இப்பொழுதே எழுந்து என்னுடன் வருவாயாக, என் நெஞ்சமே, நீ வாழ்க!

வலம் சுரிந்த பூங்கொத்துக்கள் மெல்லென மலர்கின்ற அழகிய கொம்புகள், அப் பூக்களை இழந்தனவாக வருந்துமாறு, வல்லான் ஒருவன் அக்கொம்புகளை அடித்து உதிர்த்துவிட விளங்கும் வெற்றுக் கொம்பினைப்போல, மாமரத்தை அதன் மலர்கள் முற்றும் உதிருமாறு தாக்கி வருத்தும் மணத்தை தன்னிடத்தே உள்ள தென்றல் காற்றானது, சுரநெறியிலே செல்லும் மள்ளர்களது குழன்ற மயிரிலே அம் மலர்களைச்