பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 45


சொரியும். அத்தகைய வெம்மை நிலைபெற்றிருக்கும் புன்மையான இடத்தையுடைய ஊர்களை இடையிடையே உடையது காடு.

பருந்துகள் ஈன்று காவற்படும், சிதறிய தலையினவாகிய ஒமை மரங்களையுடைய பெரிய மலையின் குகை ஒன்றிலே, ஈன்று காவற்பட்டது, மென்மையும் ஈன்றதன் அணியையும் உடைய அழகிய பெண் நாய் ஒன்று. அது பசித்ததாக, பசுமையான கண்களை உடைய அச் செந்நாயினது ஏறானது, ஆண் பன்றியினைத் தாக்கியது. அதனைக் கண்டதும் அச்சங் கொண்டு ஓடுகின்ற பெண்பன்றி மோதிச் செல்லுதலினால், பசிய குலைகளையுடைய ஈந்தினின்றும், அதன் செங்காய்கள் அறுபட்டு உதிரும். அப்படிப்பட்ட செங்காய்களுடன், பரற்கற்களும் நிறைந்த, மண்மேடாகிய வன்னிலத்தைக், கூழினை உண்ணும் கோவலராகிய கிணறு வெட்டுவோர், வலிய வாயினையுடைய குந்தாலியினால் உடைத்துக் கிணறு அகழ்ந்தனர். அகழ்ந்தும் நீர் ஊறாது போகவே, அவர்கள் கைவிட்டுச் சென்ற, தழை மூடிய அந்தக் கிணறுகள் காடுகளின் இடையிடையே விளங்கும்.

பெரிய களிற்று இனமாகிய யானைக் கூட்டம், தமது வெண்மையான தந்தங்களைக் கொள்ளவிரும்பிய இரக்கமற்ற வேட்டைக்காரர்கள், தீங்கில்லை என நினைத்துக் கருத்தின்றிச் செல்லும் வழிகளினிடையிலே, தங்களை அகப்படுத்த அகழ்ந்த மறைத்த குழிகளாக அக்கிணறுகளைக் கருதின. அவற்றைத் தூர்த்துக் கொண்டுமிருந்தன. அத்தகைய நிலைமையினையுடைய, பெருங்கற்களையுடைய வழிகள் குறுக்கிடும், நாம் செல்லுகின்ற காடு. நின் துணையின்றி யான் அதனைக் கடந்து செல்லவியலாது! (அதனால், என்னுடன் இப்பொழுதே எழுக என்பது கருத்து).

சொற்பொருள்: மா - வண்டு; திருவும் ஆம். 3. அவ்வயிறு - ஐதான வயிறு. தைஇ - கை செய்து. 6. ஒல்லாய் - அதற்கு இசையாய் 7. மனை - தலைவி, நக-மகிழ; அல்லது வீடுகளிப்புற 8. தருகம் - தருவேம், 9. புரிஇணர் வலஞ்சுரிந்த பூங்கொத்து. புலம்ப கொம்பு, கொம்பு மட்டுமேயாய் வாடித் தனிப்ப. 10. வல்லோன் - பூக்கொள்ள வல்லோனுமாம். சுரியல் - குழன்ற மயிர். 21. முரணிலம் - வன்னிலம். 25. இகழ்ந்தியங்கிய என்றது - இங்கோர் ஏதமும் இல்லை என்று பொருட்படுத்தாது திரியும் வழி.

22. நோய் தணி காதலர்!

பாடியவர்: வெறிபாடிய காமக்கண்ணியார். திணை: குறிஞ்சி. துறை: 1. வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்துத் தலைமகள் ஆற்றாளாகத் தோழி தலைமகனை இயற்பழிப்பத்