பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

அகநானூறு -களிற்றியானை நிரை


தலைமகன் இயற்பட மொழிந்தது. 2. தலைமகன் இரவுக்குறி வந்து சிறைப்புறத்தானாகத் தோழியாற் சொல்லெடுக்கப்பட்டுத், தலைமகள் சொல்லியது. -

(1. களவிலே கூடிவரும் காதலன் விரைவிலே திருமணம் வேட்டு வருவதாகவும், அதற்கான ஏற்பாடுகளுடன் திரும்புவதாகவும் கூறிப் பிரிந்து சென்றனன். அவனுடைய பிரிவு நீட்டிக்கவே தலைமகள் ஆற்றாமை உடையவளாயினாள். அவளுடைய வேதனையைக் காணப் பொறாத தோழி, தலைவன்பாற் சென்றனள். சென்று, அவன் செயலைப் பழித்துக் குறை கூறினள். அவன், தான் விரைவிலே வருவதாக இயற்பட மொழிந்து உறுதி கூறுகின்றனன். 2. தலைமகன் இரவுக்குறியிடத்தே வந்து சிறைப்புறத்தானாக இருப்ப, அதனைத் தோழி அறிந்தனள். தலைவியினிடம், அவனைப் பழித்துக் கூறினள். தலைமகள் அது பொறாது, அவனுடைய நேரிய காதலை உரைக்கின்றனள். இவர்கள் பேச்சினால், தலைமகன், இனியும், காலம் தாழ்த்தாது தலைவியை வேட்டுவரல் வேண்டுமென்ற எண்ணம் உடையவனாகின்றான்.)

          அணங்குடை நெடுவரை உச்சியின் இழிதரும்
          கணம்கொள் அருவிக் கான்கெழு நாடன்
          மணம்கமழ் வியன்மார்பு அணங்கிய செல்லல்
          இதுஎன அறியா மறுவரற் பொழுதில்,
          படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை 5

          நெடுவேட் பேணத் தனிகுவள்இவள் என,
          முதுவாய்ப் பெண்டிர் அதுவாய் கூற,
          களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி,
          வளநகர் சிலம்பப் பாடிப்பலி கொடுத்து,
          உருவச் செந்தினை குருதியொடு தூஉய், 10

          முருகுஆற்றுப் படுத்த உருகெழு நடுநாள்,
          ஆம் நற, அருவிடர்த் ததைந்த
          சாரற் பல்பூ வண்டுபடச் சூடி,
          களிற்று-இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்
          ஒளித்து இயங்கும் மரபின் வயப்புலி போல, 15

          நல்மனை, நெடுநகர்க் காவலர் அறியாமை
          தன்நசை உள்ளத்து நம்நசை வாய்ப்ப,
          இன்உயிர் குழைய முயங்குதொறும் மெய்ம்மலிந்து,
          நக்கனென் அல்லெனோ யானே - எய்த்த
          நோய்தணி காதலர் வர, ஈண்டு 2O

          ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே!