பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

அகநானூறு - களிற்றியானை நிரை



விளக்கம்: 1.வெறியாட்டயர்ந்தும் அவள் நோய் தீராத நிலை ஏற்பட்டுப் பின் அதுதான் மற்று யாவராலே வந்தது என்று தமர் கலங்கி ஐயுறாதபடி, அவன் வரைய வந்தனன். அத்தகைய காதல் உடைய அவனைப் பொல்லாங்கு சொல்லுகின்றனையோ எனத் தலைவி இயற்பட மொழிந்தமைக்கு இயைபு படுத்துக.

2. தலைவி இயற்பட மொழிந்தனள் என்று வெறியாட்டு நிகழ்ச்சியைத் தலைவனுக்குச் சொல்லி அவனை விரைய வந்து வரையத் துண்டுதல் பொருளாகத் தோழி இயற்பழித்தமைக்கு இயைபு படுத்துக. -

இரண்டானும் பயன், அவளை விரைந்துவந்து வரைந்து கொள்ளத் துண்டுதலேயாகும். வேலனின் வெறியாடலை இவ்வாறு நயமுடன் பாடியவர் இப்புலவர். இந்தச் சிறப்புப் பற்றியே இவர் “வெறிபாடிய காமக் கண்ணியார் எனக் குறிக்கப் பெற்றனர் என்பர். பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்' என்பதற்கு, இச்செய்யுளிலே தலைவி நகையாடிய நிலையை மேற்கோள் காட்டுவர் நச்சினார்க்கினியர்.

'முருகாற்றுப்படுத்தல்' என்பது, இவ்வாறு முருகனை வழிப்பட்டுத் தம்மிடத்திற்கு அழைத்துக் கொள்ளுதல் என்பதும் இதனால் அறியப்படும். முருகனிடம் மக்களை வழிப்படுத்தல் திருமுருகாற்றுப்படை முருகனையே தம் இல்லத்திடத்து ஆற்றுப்படுத்திக் கொண்டு வேண்டிவழிபடல் இந்த வெறியாடும் பண்டைய வழிபாட்டு மரபு.

23. அனைய கொல் தோழி!

பாடியவர்: ஒரோடோகத்துக் கந்தரத்தனார். திணை: பாலை துறை: தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

(பொருள் வேட்டுத் தன் தலைவியைப் பிரிந்து சென்றான் ஒரு தலைவன். கார்காலத்துத் தொடக்கத்து வருவேன் என்றவன், அது தொடங்கியும் வந்துசேரவில்லை. கார் கலத்துத் தொடக்கத்தால் இயற்கையிலே எழும் பலப்பல நிகழ்ச்சிகளையும் காணக்காணத் தலைவியின் உள்ளத்திலே வேதனை மிக்குப் பெருகிற்று. அதனைக் காட்டித் தன் துயரைத் தன் தோழியினிடம் கூறிப் புலம்புகிறாள்.)

          மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயல்,
          பாடு உலந்தன்றே, பறைக்குறல் எழிலி;
          புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை
          நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்குபிணி அவிழக்,
          காடே கம்மென் றன்றே; அவல, 5