பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க்கேசிகன் ★ 49



          கோடு உடைந்தன்ன கோடற் பைம்பயிர்,
          பதவின் பாவை, முனைஇ, மதவுநடை
          அண்ணல் இரலை அமர்பினை தழீஇத்,
          தண்அறல் பருகித் தாழ்ந்துபட் டனவே;
          அனையகொல் - வாழி, தோழி! - மனைய 10

          தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்
          மெளவல், மாச்சினை காட்டி,
          அவஅளவு என்றார், ஆண்டுச்செய் பொருளே!

பறையொலிபோல இடிமுழக்கத்தினை உடைய மேகங்கள், மண்ணின் இடமெல்லாம் குளிருமாறு, குளிர்ந்த மழையைப் பெய்தன. அதனால், நிலத்தின் கோடை வருத்தமும் அடங்கிற்று. புதர்களின் மேலே, சிவல் முள்ளைப்போன்ற சிவந்த முல்லையின் அரும்புகள் தோன்றின. நெருங்கிய குலையினை உடைய பிடாவின் அரும்புகளுடன் ஒன்றுகூடி, அச் செம்முல்லையின் அரும்புகளும் தம் பிணிப்பு அவிழ்ந்து மலர்ந்தன. அதனால், காடும் கம்மென்ற நறுமணம் உடையதாயிற்று.

பள்ளங்களிலேயுள்ள, சங்குகள் உடைந்தாற்போலத் தோற்றும் வெண்கோடலது பசிய பயிரோடு, அறுகங் கிழங்கையும் தின்று தெவிட்டுதலின், மேலும் மேய்தலை வெறுத்து, மதர்த்த நடையினையும் தலைமையினையும் உடைய ஆண்மானானது தான் விரும்பிக் காதலித்த தன் பெண்மானைத் தழுவியவாறே, குளிர்ந்த மழை நீரைப் பருகி ஓரிடத்தே சேர்ந்து தங்கிவிட்டது.

மனையினிடத்தேயுள்ள முல்லை சூழ்ந்து மலருகின்ற இடமாகிய, குறுகிய நொச்சியது கருமையான கொம்பினைச் சுட்டிக்காட்டித், தாம் வேற்று நாட்டிலே இருந்து பொருள் ஈட்டித் திரும்பி வரும் காலத்தின் எல்லை, அந்த மெளவல் பூக்கத் தொடங்கும் காலத்தின் அவ்வளவே என்றனர் அல்லவோ? தோழி, நீ வாழ்க! இஃது அந்தக் காலந் தானோ? (அதனையுங் கடந்து விட்டதனை அறிவாயாக என்பது கருத்து)

சொற்பொருள்: 1. மண்கண் - மண்ணிடம். வீசுதல் - கொடுத்தல், 2. பாடு - ஒலி. 5. கம் - அறுகரணம். 6. கோடு - சங்கு. அது பெயராகவுடைய பயிர்; கோடலைக் களையாகவுடைய வரகு முதலாயின எனினும் ஆம், 9. தாழ்ந்து படுதல் ஓரிடத்தே சேர்ந்து தங்குதல். 12. மாச்சினை - மெளவல் சூழ்ந்த நொச்சிக் கொம்பு.

விளக்கம்: நிலத்தின் பாடு அடங்கிற்று, ஆயின் என் பாடு அடங்கவில்லை என்பது கருத்து.சிவல்-கவுதாரியும் ஆம்.'மழை