பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

அகநானூறு - களிற்றியானை நிரை



26. புலத்தல் கூடுமோ தோழி!

பாடியவர்: பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி. திணை: மருதம். துறை: தலைமகன் தோழியை வாயில் வேண்டி, அவளால் தான் வாயில் பெறாது, ஆற்றாமையே வாயிலாகப் புக்குக் கூடியவனின் நீக்கத்துக்கண், புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

(தலைவன், ஒருகாலத்துத் தலைவி போதும் போதும் எனத் தடுத்தும், அவளை அணைத்துக் கிடந்தனன். அவர்களுக்கு ஒரு செல்வனும் தோன்றினபின், அவன் பரத்தை வயத்தனாகித் திரிந்தான். ஆர்வமுடன் அவள் தழுவினால், அவள் மார்பகத்துப் பால் தன் மார்பில் படுமோ என்று அஞ்சினான். அது பொறாத அவள் தன் புதல்வனைக் கொஞ்சினாள். அவன் உள்ளம் நெகிழ்ந்தது. புதல்வனைப் போற்றும் வகையால் அவளை அணுகி அணைத்து நின்றான். தலைமகள் அந்நிகழ்ச்சிகளைத் தன் தோழியிடம் இப்படிக் கூறுகிறாள்.)

          கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற,
          மீன்முள் அன்ன, வெண்கால் மாமலர்
          பொய்தல் மகளிர் விழவுஅணிக் கூட்டும்
          அவ்வயல் தண்ணிய வளம்கேழ் ஊரனைப்
          புலத்தல் கூடுமோ - தோழி! - அல்கல் 5

          பெருங்கதவு பொருத யானை மருப்பின்
          இரும்புசெய் தொடியின் ஏர ஆகி,
          'மாக்கண் அடைய மார்பகம் பொருந்தி
          முயங்கல் விடாஅல் இவை'என மயங்கி,
          'யான்ஓம்' என்னவும் ஒல்லார், தாம்மற்று 10

          இவை பாராட்டிய பருவமும்உளவே; இனியே
          புதல்வற் றடுத்த பாலொடு தடைஇத்
          திதலை அணிந்த தேம்கொள் மென்முலை
          நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் அகலம்
          வீங்க முயங்கல் யாம்வேண் டினமே; 15

          தீம்பால் படுதல் தாம்அஞ்சினரே. ஆயிடைக்
          கவவுக்கை நெகிழ்ந்தமை போற்றி, மதவுநடைச்
          செவிலி கைஎன் புதல்வனை நோக்கி,
          'நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர்; இஃதோ
          செல்வற்கு ஒத்தனம் யாம் என, மெல்லஎன் 2O

          மகன்வயின் பெயர்தந் தேனே, அதுகண்டு
          ‘யாமும் காதலம், அவற்கு'எனச் சாஅய்,