பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

அகநானூறு -களிற்றியானை நிரை


என் தலைவனைப் புலத்தலுங் கூடுமோ? (தோழி! யான்யாது செய்வேனோ!?)

சொற்பொருள்: 7. தொடியின் நேரவாகி - தொடியினது அழகினை உடையவாகி. 8. அடைய - பொருந்த, 6. யானை மருப்பின் இரும்புப் பூணாவது கிம்புரி என்க9.மயங்கி வருந்தி 10. ஒமென்னவும் - ஒழியும் என்னவும் 13. தேங்கொள் - இடங்கொள்; பால்பற்றி இனிமையும் ஆம். 17. கவவுக்கை - அகத்தீட்டு ஒழுக்கம். நெகிழ்தல் - நழுவுதல். 18. செவிலிகை - செவிலியிடம். 19. நல்லோர் - அழகியரான பரத்தையர். 23. சிறுபுறம் - முதுகு.

உள்ளுறை: “முள்ளியின் பக்கலிலே தோன்றி வாழும் பூவானது, அதனைவிட்டுப் பிறர்க்கு அழகுசெய்யப் பயன் பட்டது; அதுபோல, நம்முடன் பிறந்த நெஞ்சு நம்மைவிட்டு அவருடன் செல்லலாயிற்று. யாம் புலத்தல் கூடுமோ?” என்பதாம்.

27. மட்வை மன்ற நீயே!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார். திணை: பாலை, துறை: செலவுணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது. சிறப்பு: பாண்டியர்.

("தோழி! நம் தலைவர் கானம் கடுமையானது எனவும் கருதார். நாம் அழுமாறு பொருள் விரும்பிச் செல்கின்றேன்’ என்றனரே” என்கிறாய். நீ மிகவும் மடமையுடையவள். நின் கண்களின் மாறுபட்ட பார்வை எங்ங்ணம் அவரைப் போகவிடும்? அவர் போகார்காண்! இவ்வாறு கூறித்தேற்றுகிறாள் தலைவியின் தோழி)

          "கொடுவரி இரும்புலி தயங்க, நெடுவரை
          ஆடுகழை இருவெதிர் கோடைக்கு ஒல்கும்
          கானம் கடிய என்னார், நாம்அழ,
          நின்றதுஇல் பொருட்பிணிச் சென்றுஇவண் தருமார்,
          செல்ப” என்ப, என்போய்! நல்ல 5

          மடமை மன்ற நீயே, வடவயின்
          வேங்கடன் பயந்த வெண்கோட்டு யானை,
          மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும்
          கொற்கைஅம் பெருந்துறை முத்தின் அன்ன
          நகைப்பொலிந்து இலங்கும் எயிறுகெழு துவர்வாய 10

          தகைப்பத் தங்கலர் ஆயினும், இகப்ப
          யாங்ஙனம் விடுமோ மற்றே - தேம்படத்