பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அகநானூறு - களிற்றியானை நிரை


          மேவல் தண்டா மகிழ்நோக்கு உண்கண்
          நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
          வாழலென் யான்" எனத்தோற்றிப், பல்மாண் 10

          தாழக் கறிய தகைசால் நன்மொழி
          மறந்தனிர் போறிர் எம்'எனச் சிறந்தநின்
          எயிறுகெழு துவர்வாய் இன்நகை அழுங்க
          வினவல் ஆனாப் புனையிழை - கேள்இனி
          வெம்மை தண்டா எரிஉகு பறந்தலை, 15

          கொம்மை வாடிய இயவுள் யானை
          நீர்மருங்கு அறியாது, தேர்மருங்கு ஓடி,
          அறுநீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
          உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்குஅருங் கடத்திடை,
          எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு 20

          நானுத் தளைஆக வைகி, மாண்வினைக்கு
          உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
          மடம்கெழு நெஞ்சம் நின்உழை யதுவே!

தான் தொடங்கிய வினையைக் கைவிடாதது; தளர்ச்சி இல்லாத வன்மையான முயற்சியினை உடையது; பட்டினி கிடந்து உயிர் வருந்துவதேயானாலும், தான் வீழ்த்திய களிறு இடப்பக்கமாக வீழ்ந்தால் அதனைத் தின்னாதது புலி. அதனினும் காட்டில் மேம்பட்டதும், என்றும் தாழ்வு மனப்பான்மை என்பதே இல்லாததுமான உறுதியுடைய நும் உள்ளம் மென்மேலும் பொருள் ஆர்வத்தால் மிகுந்தது. அதன்மேல், பொருளிட்டும் வினைக்குப் போக எம்மைப் பிரிந்தும் நீர் சென்றீர். அந்தக் காலத்திலே

“கத்தியினால் பிளக்கப்பட்டு, இரு பிளவாக விளங்கும் வனப்புடைய மாவின் நறிய வடுவினைப்போலக், காணுந் தோறும் காணுந்தோறும் உள்ளத்திலே களிப்பு மேவுதல் குறையாத நோக்கினைப் பெற்றவை மையுண்ட நின் கண்கள். அவற்றை நினையாது கழிந்த நாளிலே வேறு வருவது தாம் யாதாயினும் யான் உயிர் வாழ்ந்திரேன் என என்னைத் தெளிவித்துப், பல மாண்புகளும் பணிவோடுங் கூறினர். அழகு மிக்க அந்த நல்ல சொற்களை

‘எம்மிடத்து மறந்து விட்டவராயினiர்?’ என்று, நினது சிறந்த பற்கள் விளங்கும், பவளச் செவ்வாயின் இனிய சிரிப்பும் தோன்றுதல் இல்லாது கெட நின்று, எம்மைக் கேட்பதை நீங்காத அழகிய அணிகளை அணிபவளே! இப்பொழுது, யான் சொல்லும் இதனையும் கேட்பாயாக;