பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 65


கொடுக்கும் எனலும் ஆம். 12. என்பிலர் - என்று சொல்லும் வார்த்தை அளவுகூட அன்பு இல்லாதவர்.

விளக்கம்: "அவர் சென்றார் என்று சொல்லமாட்டார்கள்; இவள் வருந்தி மெலிந்தாள் என்கின்றனரே” எனத் தலைவி வருந்துகிறாள். பிரிவோடு காட்டின் ஏதத்திற்கும் அவள் அஞ்சியமை இதனால் பெறப்படும்.

32. தோழி நான் சென்மோ!

பாடியவர்: நல்வெள்ளியார். திணை: குறிஞ்சி. துறை: (1) பின்னின்ற தலைமகனுக்குக் குறைநேர்ந்த தோழி, தலை மகளுக்குக் குறைநயப்பக் கூறியது. (2) தோழிக்குத் தலைமகள் சொன்னது உம் ஆம்.

((1) தலைவனின் காதலுக்கு இசையாத தலைவியிடம், அவனுக்காகப் பரிந்துபேசித் தோழி வேண்டுகிறாள். (2) தன் உள்ளம் நெகிழ்ந்த நிலையைத் தோழியிடம் கூறித் தலைவி அறத்தொடு நிற்கிறாள்.)

          நெருநல் எல்லை ஏனல் தோன்றிச்,
          திருமணி ஒளிர்வரும் பூணன் வந்து,
          புரவலன் போலும் தோற்றம் உறழ்கொள,
          இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிச்,
          சிறுதினைப் படுகிளி கடீஇயர், பன்மாண் 5

          குளிர்கொள் தட்டை மதன்இல புடையாச்,
          'சூரர மகளிரின் நின்ற நீமற்று
          யாரையோ? எம்அணிங்கியோய்! உண்கு எனச்
          சிறுபுறம் கவையினனாக, அதற்கொண்டு
          இகுபெயல் மண்ணின் ஞெகிழ்பு, அஞர்உற்ற என் 10

          உள்அவன் அறிதல் அஞ்சி, உள்இல்
          கடிய கூடு, கைபிணி விடாஅ
          வெரூஉம் மான்பிணையின் ஒரீஇ, நின்ற
          என்உரத் தகைமையின் பெயர்த்து, பிறிதுஎன்வயின்
          சொல்ல வல்லிற்றும் இலனே; அல்லாந்து, 15

          இனம்தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும்
          தோலாவாறு இல்லை - தோழி! நாம் சென்மோ,
          சாய்இறைப் பனைத்தோட் கிழமை தனக்கே
          மாசுஇன் றாதலும் அறியான், ஏசற்று,
          என்குறைப் புறனிலை முயலும் 2O

          அங்க ணாளனை நகுகம், யாமே!