பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

அகநானூறு - களிற்றியானை நிரை



அழகிய மணிகள் ஒளிவீசிக் கொண்டிருக்கும் பூணினை அணிந்தவன் ஒருவன், நேற்றைப் பொழுதிலே தினைப் புனத்தினிடத்தே வந்து தோன்றினான். அரசனைப் போன்ற தனது தோற்றத்துடன் மாறுபட்டதாக, இரத்தல் செய்யும் எளிய மகனைப்போலப் பணிவான சொற்களையும் பலகாற்பேசினான். “சிறிய தினைப்பயிரிலே வந்து படியும் கிளிகளை ஒட்டுமாறு, குளிருடன் கூடியதட்டையாகிய கிளிகடிகருவிகள் வலியில்லாதன கொண்டு பலமுறையும் புடைத்துச் சூர்அர மகளிரினைப் போல நின்ற, நீர்தான் யாவிரோ? எம்மை வருத்தியவளே? நின்னை நுகர்வேன்” என்று கூறினான். என் முதுகினை அணைத்துக் கொண்டும் நின்றான்.

அவன் உரையினையும் செயலினையும் மேற்கொண்டு, மழை பெய்யப்பெற்ற மண்ணினைப்போலே நெகிழ்வுற்று என் உள்ளமும் வருந்தியது. அந்த நிலையினை அவன் அறிந்து விடுவானோ என நான் அஞ்சினேன். என் உள்ளத்துடன் படாத கடுமையான சொற்களைக் கூறினேன். என்னை அணைத்திருந்த அவன் கைகளை அகற்றினேன். பயந்து வெருவும் மானின் பிணையினைப்போல அவன் அணைப்பினின்றும் விலகி நின்றேன். என்னுடைய வன்மையான தகைமையைக் கண்டு அவன் கூசினான். தன் ஆர்வத்தையும் உள்ளடக்கிக் கொண்டான்.

அதன்பின், என்னிடத்து ஏதும்சொல்லுவதற்கு வலிமை அற்றவனானான்.மிகவும் வருந்தி அயர்ந்தான்.தன் இனத்தினின்றும் ஒதுக்கப்பட்ட களிறேபோலத் தளர்வுடன் சென்றான். அவன், இன்றும் வந்து நமக்குத் தோல்வி அடையாமற் போவது இல்லை!

வளைந்த சந்தினை உடைய பணைத்த நம் தோள்களைத் தழுவுகின்ற உரிமை, குற்றமேதும் இல்லாமல் தன் ஒருவனுக்கே உள்ளது என்பதனையும் அவன் அறியான். வருந்தி, என்னால் அடையலாகும் காரியத்திற்கு, என்னையே இரந்து பின் நிற்றற்கும் முயல்வான். நம்முன் வருகின்ற, அத்தலைவனை நாமும் நகையாடி மகிழ்வோம். தோழி, நாம் செல்லுவோமோ!

சொற்பொருள்: புரவலன் - புரப்பவன், அரசன். தோற்றம் - பொலிவு. உறழ்கொள மாறுகொள்ள, 6. குளிர் - ஈரம், ஒரு கிளிகடி கருவி. மதன் - வலி, 3. உண்கென - உண்பேன் என்ன. 1. உள் அறிதல் - உள்ளத்து நெகிழ்வை அறிதல்.14, இன் அசை 18 சாய்இறை வளைந்த சந்து. 18. ஏசற்று வருத்தம் உற்று. 20. புறநிலை - பின் புறமாக நிற்றல்.

விளக்கம்: தோழி கூற்றாக உரைக்கும்போது, ‘என் சிறு புறம் கவையினன்' என்பதைப் படைத்து மொழிதலாகவும், தலைவி கூற்றாகக் கொள்ளும்போது அறத்தொடு நிற்றலாகவும் கொள்க.