பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

அகநானூறு - களிற்றியானை நிரை


உடையவளுமான என் மனைவியோ வீட்டிலேயே தனித்து உள்ளாள்!

செவ்விய நிலையிலேயுள்ள யாமரம் ஒன்று, தளிரற்ற கிளைகளை உடையதாயிருந்தது. கப்பின்றி, ஒன்றாக மிகவும் உயர்ந்து வளர்ந்திருந்தது அதன் ஒரு கிளை. அதன் பால் வன்மையுடன் பறக்கும்திறன் உடையதும், சிள்ளென்று ஒலி செய்வதும், இரை கொள்ளுதலிலே வல்லதும் ஆன பருந்துச் சேவல் ஒன்றும் இருந்தது. அது, வளைந்த வாயினையுடைய தன் பெட்டையினைத் தன்பால் வரும்படியாக அழைத்துக் கொண்டிருந்தது. இளி என்னும் இசையொலிபோன்று அதன் இனிய குரல் ஒலித்துக் கொண்டிருக்கும். அத்தகைய அரிய காட்டு வழியிலே -

செல்வதற்கு அருமையுடையது என்று அப்பொழுதே கூறாது, இத்துணையும் என்னுடன் போந்தனை இப்போதோ, என் காதலியாகிய அவளுடைய மலரும் தன் பெருமையை இழத்தற்குக் காரணமாவது போன்ற மையுண்ட அழகிய குளிர்ச்சி பொருந்திய கண்களின் மயங்கிய நோக்கத்தினை நினைந்து விட்டனை! உளியின் வாயினைப் போன்று முனை கூர்மையான, வெம்மையினையுடைய பரற்கற்கள் பொருந்திய வழிகளையுடைய குன்றுகள் ப்லவற்றையும் கடந்து வந்தோம். 'யானே தனியன்' என்று, யாரும் துணையற்றவனாக ஆகுமாறு, என் உள்ளமாகிய நீயே என்னைக் கைவிட்டுப் போகவும் நினைத்தனை, நீயே இவ்வாறானால்,

சென்ற போர்களில் எல்லாம் வெற்றிமாலை சூடுகின்றவன் சேரன். அச் சேரனது பழைமையாகிய கொல்லிமலையின் உச்சியிலேயுள்ள சிறிய மூங்கிலையொத்த வளைந்த முன்கையினை உடைய பெரிய தோள்களை உடையவள், தேமலை அணிந்த அல்குல்தேரினை உடையவள்; வெண்மையான பற்களை உடையவள் என் காதலி. அவளிடத்திலிருந்து, அன்றே நீ பிரியாதிருந்தனையானால், மிகவும் நன்றாக இருந்திருக்குமே!

பிரிந்து புறப்பட்ட அன்று, என் இயல்பினை நீ அறிந்தாயில்லை. இப்பொழுது, நாம் செய்யவேண்டிய இவ்வினையானது இடைவழியில் உற்ற அளவிலேயே விலக்குகின்றனை. அங்ஙனம் விலக்கினால், பிறர் நகையாடத்தக்க இகழ்ச்சியினை நீ அடைவாய் அல்லையோ? (அதனால், அங்ங்ணம் விலக்காது, என்னுடனேயே அமைவாயாக.)

சொற்பொருள்: 1.வெறுப்ப- மிக4. ஒன்று ஓங்கு உயர் சினை - கிளைகளின்றி ஒன்றாக ஓங்கிவளர்ந்த கொம்பு. 5. வீளை சிள்ளென்ற ஒசை. 7. இளி என்னும் பண் என்றது, கேட்டார் விளிக்கும் குரல். 10. தெளியா நோக்கம் - வெருவின பார்வை.