பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/83

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 69


13. ஒழிய ஊங்கே போக. முனா அது - பழையதாக. 16. வரி - திதலை. 19. விலங்கின் விலக்குவையாயின்.

விளக்கம்: இங்கு வந்தபின் மீளல் ஆகாது என்றான், நெஞ்சுக்கு இவ்வாறு கூறுகின்றான். பருந்துச் சேவல்கூடத் தன் பெடையை அழைக்கும்போது, யான் எங்ஙணம் அவளை மறத்தல் சாலும் என்பது குறிப்பு. உள்ளம் துறந்த வழி வேறு துணையாதுமில்லை; ஆதலால் 'யாமே எமியம் ஆக' என்றனன்.

34. இன்னும் வரல் உரைமோ!

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். திணை: முல்லை. துறை: வினைமுற்றிய தலைமகன் தேர்ப்பாகனுக்குச் சொல்லியது.

(தன் தலைவியைப் பிரிந்து சென்று, வினை முற்றியபின் ஊர் திரும்பும் தலைவன், தேரினை விரையச் செலுத்துமாறு தன் பாகனிடம் கூறுகின்றான். அவனுள்ளத்துக் காதலின் மிகுதியை இது நன்றாக உணர்த்தும்)

சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
கண்ணியின் மலரும் தண்நறும் புறவில்,
தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன
இருதிரி மருப்பின் அண்ணல் இரலை
செறிஇலைப் பதவின் செங்கோல் மென்குரல் 5

மறிஆடு மருங்கின் மடப்பினை அருத்தித்,
தெள்அறல் தழீஇய வார்மணல் அடைகரை,
மெல்கிடு கவுள துஞ்சுபுறம் காக்கும்
பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்;
செல்க, தேரே - நல்வலம் பெறுந! 10

பசைகொல் மெல்விரல், பெருந்தோள், புலைத்தி
துறைவிட் டன்ன தூமயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற்,
செந்தார்ப் பங்கிளி முன்கை ஏந்தி,
'இன்றுவரல் உரைமோ, சென்றிசினோர்திறத்து' என, 15

இல்லவர் அறிதல் அஞ்சி, மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை மாண்நலம் பெறவே!

குளிர்ந்த நறிய முல்லை நிலம்; சிறிய கரிய பிடாவின் குறும்புதர் பிடா மலர்ந்து விளங்கும் அந்தப் புதரானது வெண்மையான உச்சியுடன் கண்ணி சூடியிருத்தல் போலே மலர்ந்திருக்கும். செருப்பு அணிந்த பாதங்களையுடைய