பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/87

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மூலமும் உரையும்

புலியூர்க் கேசிகன் ☆ 73


எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், இயல்தேர்ப் பொருநன் என்னும் எழுவர்.

(தலைவன், தன் மனைவியைப் பிரிந்து பரத்தை ஒருத்தியுடன் கூடியபின் வீடுதிரும்பி வந்தான். தலைவி, தலை மகனோடு அதனால் ஊடினாள், ‘தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் வெற்றி விழாவிலே திளைக்கும் போர் வீரர்களின் ஆரவாரத்தினுங் காட்டில் அவனுடைய பரத்தமையால் எழுந்த ஊரலர் பெரிதாயிருந்தது என, அவள் சொல்லுகிறாள்.)

          பகுவாய் வராஅல் பல்வரி இரும்போத்துக்
          கொடுவாய் இரும்பின் கோள்இரை துற்றி,
          ஆம்பல் மெல்லடை கிழியக் குவளைக்
          கூம்புவிடு பன்மலர்சிதையப் பாய்ந்து, எழுந்து,
          அரில்படு வள்ளை ஆய்கொடி மயக்கித் 5

          தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
          கயிறுஇடு கதச்சேப் போல மதம்மிக்கு,
          நாள், கயம்உழக்கும் பூக்கேழ் ஊர
          வருபுனல் வையை வார்மணல் அகன்துறைத்,
          திருமருது ஓங்கிய விரிமலர்க் காவில், 10

          நறும்பல் கூந்தற் குறுந்தொடி மடந்தையொடு
          வதுவை அயர்ந்தனை என்ப அலரே,
          கொய்சுவற் புரவிக் கொடித்தேர்ச் செழியன்
          ஆலங் கானத்து அகன்தலை சிவப்பச்,
          சேரல், செம்பியன், சினம்கெழு திதியன், 15

          போர்வல் யானைப் பெலம்பூண் எழினி,
          நார்அரி நற்வின் எருமை யூரன்,
          தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
          இருங்கோ வேண்மான், இயல்தேர்ப் பொருநன்,என்று
          எழுவர் நல்வலம் அடங்க, ஒருபகல் 2O

          முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரைசெலக்,
          கொன்று களம்வேட்ட ஞான்றை,
          வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே'

பிளந்த வாயினையும், மேலே பல கோடுகளையும் உடையது வரால்மீன். அதன் பெரிய ஆண் ஒன்று, வளைந்த வாயினையுடைய தூண்டில் முனையிலிருந்த தனக்கு எமனாகிய இரையை விழுங்கிற்று. விழுங்கியதும், ஆம்பலது மெல்லிய இலையானது கிழியுமாறு மேலெழுந்து துள்ளிற்று. குவளையின் அரும்பு மலர்ந்த பல மலர்களும் சிதையும்படியாக அவற்றினூடும்