பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அகநானூறு - களிற்றியானை நிரை


உணர்வுகள், அகத்துப் பொங்கி எழுவனவும், புறத்து நிகழ்ச்சிகளைச் சார்ந்து தோன்றுவனவும் என்னும் இரு வகையின. அவற்றுள், அகத்தே முகிழ்த்துப் பொங்கி எழுந்து பெருகுவதாய்ப், புறத்தே பேச்சாகவும் வெளிப்பட்டுத் தோன்றுகின்ற உணர்வுகளின் தமிழ்ச் சொற்கோவையே, அகநானூற்றுக் களிற்றியானை நிரை என்னும் இந்நூலாகும். இது, நெடுந்தொகை என்னும் அகநானூற்றுள் முதற்பகுதியும் ஆகும்.


அகநானூற்றைத் தொகுத்தவர், உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர், தொகுப்பித்து உதவியவன், பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இப் பாண்டியனின் செய்யுள், மருதத்திற்குரிய 26-ஆம் செய்யுளான இந்நூலுள் விளங்குதலைக் காணலாம்; இதனால், இவனும் தமிழறிந்த பெரும் புலமையாளன் என்பது விளங்கும்.


தாம் தொகுத்த தொகைநூல் என்றும் மறையாது தமிழர்பால் நிலைக்க, இதன் தொகுப்பாசிரியர் மேற்கொண்ட செய்யுள் வைப்புமுறை பெரிதும் பாராட்டற்கு உரியதாகும். ஒற்றை எண் பெறும் 1,3,5,7,9 என வரும் செய்யுட்கள் பாலைத் திணையிலும், இரண்டும் எட்டும் பெறுவன குறிஞ்சித் திணையிலும், நான்கு எண் பெறுவன முல்லைத் திணையிலும், ஆறு எண் பெறுவன. மருதத் திணையிலும், பத்து எண் பெறுவன நெய்தல் திணையிலுமாக, முறையே செய்யுட்கள் ஒருவகை எண்முறை ஒழுங்கோடு தொகுக்கப் பெற்றுள்ளன.

பழந்தமிழரின் அகவொழுக்க நினைவுகளோடு மட்டுமே அமையாமல், அவர்களது பெருமையும், மறமும், ஒழுக்கமும், வளமையும், பண்பும், மற்றும் பற்பல வாழ்வியல் நெறிச் செப்பங்களும் இத் தொகையினுள் பொதிந்து கிடக்கின்றன. இவை, நமக்கு நம் முன்னோர் தம் வாழ்வியலிலே சிறந்து ஒளிர்ந்த செப்பத்தையும், பெருமிதத்தையும் நன்கு விளக்குகின்றன.


இந் நெடுந்தொகையின் பழைய உரையுடன் கிடைத்த ஏட்டுப் பிரதிகளுள் ஒன்று, திருநெல்வேலிச் சீமையிலுள்ள நாங்குனேரி வட்டத்துப் பெரும்பழஞ்சி (பெருமளஞ்சி என்று இந்நாளிலே வழங்கும்) என்பதும், அதன்கண் ‘ஆறு நாட்டுக்குச்