பக்கம்:அகநானூறு 1, புலியூர்க் கேசிகன்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அகநானூறு -களிற்றியானை நிரை


தோள்கள், நாம் பிரிந்துவிட்ட தன்மையினால் அவ்வழகு கெட மிகவும் மெலிந்து நெகிழ்ந்திடலால், அவள் மிகவும் வருந்தியவளாக இருப்பாளோ?

சொற்பொருள்: 1. மை - எருமை 13. வண்டின் - வண்டினையுடைய 15. கிளைஇய தோற்றின. பாடியவர், சேர மானந்தையார் எனவும் உரைப்பர்.

விளக்கம்: கார்க்காலம் த்ொடங்கிய செய்தியை, வயலில் நடவு முடிந்த உழவர் தோட்டங்களை உழச் செல்வதும், நடாதவர் வயல்களை உழுது கொண்டிருப்பதும், மலர்கள் மலர்ந்ததும் பிறவும் உணர்த்தும். அதற்குள், வீடு திரும்ப வேண்டியவன், திரும்ப இயலாமையினால், அவளை நினைந்து இவ்வாறு கூறினான் என்க.

42. உவகை பெய்தற்றே!

பாடியவர்: கபிலர். திணை: குறிஞ்சி. துறை: தலை மகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகளுக்குச் சொல்லியது.

(தலைமகன் தான் விரைய வந்து தலைமகளை மணந்து கொள்வதாகத் தோழியிடம் உறுதி கூறினான். இற்செறிப்பிலே இருந்த தலைவியிடம், தோழி வந்து, அந்த நல்ல செய்தியை உவப்புடன் கூறுகின்றாள்.)

          மலிபெயல் கலித்த மாரிப் பித்திகத்துக்
          கொயல்அரு நிலைஇய பெயல்ஏர் மணமுகைச்
          செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக்கண்
          தளிர்ஏர் மேனி, மாஅ யோயே!
          நாடுவறம் கூர, நாஞ்சில துஞ்சக் 5

          கோடை நீடிய பைதுஅறு காலைக்
          குன்று கண்டன்ன கோட்ட, யாவையும்
          சென்று சேக்கல்லாப் புள்ள, உள்இல்
          என்றூழ் வியன்குளம் நிறைய வீசிப்,
          பெரும்பெயல் பொழிந்த ஏம வைகறை, 10

          பல்லோர் உவந்த உவகை எல்லாம்
          என்னுள் பெய்தந் தற்றே - சேண்இடை
          ஓங்கித் தோன்றும் உயர்வரை
          வான்தோய் வெற்பன் வந்த மாறே!

மாரிக் காலத்திலே பூப்பது 'பித்திகம் என்னும் பிச்சி மலர். மிகுதியான மழை பெய்தலாலே, அங்ஙனம் தழைத்த பித்திகத்தின், கொய்தற்கும் அரிதாகுமாறு மட்டு இல்லாமல் விளங்கும், மழைக்கு எழுச்சிபெற்ற மணம் நிறைந்த அரும்பினது,