பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மரணம் குறித்துத் தலையங்கம் எழுதி, அவரது சாதனைகளைப் புகழ்ந்து நினைவாஞ்சலி செலுத்தியது. இதன்பின் வந்த இதழ் ஒன்றில், லெனினது மரணத்துக்குப் பின் இரு வாரங்கள் கழித்து சென்னையில் நடந்த சென்னை தொழிற் சங்கங்களது மாநாட்டில், முதுபெரும் தொழிற்சங்கத் தலைவர்களான திரு.வி.க.வும், டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவும், லெனினைக் குறித்துப் பேசிய பேச்சுக்களின் பகுதிகளைச் சுதேசமித்திரன் வெளியிட்டிருந்தது. இந்த மாநாட்டில் எட்டுத் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் லெனினுக்கு அஞ்சலி செலுத்தி உரையாற்றினர்.

இளம் கவிஞர் ஒருவரின் நினைவாஞ்சலி

கிட்டத் தட்ட இதே காலத்தில், மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பரும் சீடருமான பரலி சு.நெல்லையப்பர் நடத்தி வந்த லோகோபகாரி என்ற தமிழ் வாரப் பத்திரிகையின் 21-3-1924 தேதியிட்ட இதழில், பாஸ்கர ஆதிமூர்த்தி என்ற இளங்கவிஞர் லெனினது மரணம் குறித்து "காலஞ்சென்ற நிக்கொலாய் லெனின்" என்ற தலைப்பில் எழுதிய சரமகவி வெளி வந்தது. எழுசீரடி ஆசிரிய விருத்தத்தில் ஏழு பாடல்களைக் கொண்ட இந்தச் சரமகவி, லெனின் சிறையிலும் தேசப் பிரஷ்ட வாழ்விலும் அனுபவித்த துன்பங்களை நினைவு கூர்ந்தது. நீதியை நேசிப்பவர்கள் எல்லோரும், சுற்றோரும் ஞானியரும் லெனினது மரணத்துக்காக வருந்து வதாகவும், ஏனெனில் அவர் ஏழைகளின் நண்பராக அவர் களை விடுதலை செய்த வீரராக வாழ்ந்தார் என்றும் அந்தக் கவிதை அஞ்சலி செலுத்தியது. அதில் ஒரு பாடல்:

பசியொரு புறத்தும், நளிர்
குளிரொரு புறத்தும், உயிர்
பருகி யழிவுற்ற படியே

நிசி யொரு புறத்தும், மிகு
நிலையறு பலக் குறைவும்
நெடிதுயிர் நசிக்கும் எளியோர்

32