பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறார். இருவரும் விரைவில் வெற்றிபெறுவர். இந்த இருபெரும் தலைவர்களும் தேர்ந்தெடுத்த மார்க்கங்கள் வேறு வேறாயினும் குறிக்கோள்கள் ஒன்றேதான். இவர்களுக்கு நாம் தலை வணங்குவோம்.


5

1930 ஆம் ஆண்டுகளில்


பலமுறை கைது செய்யப்பட்டதன் காரணமாகவும், சோஷலிஸ்டுகளின் இயக்கத்தை கட்டியமைத்து வந்தவர்களை அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் பல்வேறு தொல்லைகளுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கி வந்த நிலைமையின் காரணமாகவும், இருபதாம் ஆண்டுகளின் இறுதியில் சிங்காரவேலர் சோஷலிசக் கருத்துக்களைச் சட்ட பூர்வமான முறைகளின் மூலம் மட்டுமே பரப்பிவர முற்பட்டார். இதுவே அந்நாளில் கடவுள் எதிர்ப்பு, மாதர் விடுதலை, ஜாதிக் கொடுமையிலிருந்து விடுதலை முதலிய நோக்கங்களுக்காகப் பாடுபட்டு வந்த சுயமரியாதை இயக்கத்தோடு அவர் தொடர்புகளை மேற்கொள்ள வழி வகுத்தது. இந்தத் தொடர்பின் பயனாக, சுயமரியாதை இயக்கத்தின் தந்தையும் தலைவருமான பெரியார் ஈ.வே.ரா., “பேஜ்போஷ்னிக்” என்ற சோவியத் நாத்திகக் கழகத்தின் விருந்தினராக 1931-ல் சோவியத் யூனியனுக்குச் சென்று வந்தார். ஈ.வெ.ரா. தாயகம் திரும்பிய பின் தமது சொந்த அச்சகத்தை நிறுவி, குடியரசு என்ற வாரப் பத்திரிகையையும் வெளியிட்டு வரத் தொடங்கினார். மேலும், அவர் தமது அச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவின் மூலம், மதம் பற்றி லெனின் எழுதிய கட்டுரைத் தொகுப்பின் தமிழாக்கத்தை “லெனினும் மதமும்” என்ற தலைப்பில் 1933-ல்

34