பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கட்டத்தில் ‘சோவியத் நண்பர்கள் சங்கம்’ அமைக்கப்பட்டதும், அது தமிழ்நாடு முழுவதிலும் செயல்பட்டதும், இந்த வாய்ப்பினை மேலும் ஊக்குவித்தது.

இந்தக் காலத்தில்தான் தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் ஏனைய பல விஷயங்களோடு, மாக்சிம் கார்க்கி, மிகாயில் ஷோலகோவ், இலியா இரென்பர்க் முதலிய பிரபல சோவியத் எழுத்தாளர்களின் கதைகள் உட்பட, பல சோவியத் சிறு கதைகளின் மொழிபெயர்ப்புக்களும் இடம் பெற்று வந்தன. மேலும், யுத்த ஆண்டுகளின் போது மீ. லி. சபரிராஜன் மொழி பெயர்த்த சுமார் 20 ரஷ்ய, சோவியத் சிறுகதைகளின் தொகுதி ஒன்றும் “ருஷ்யச் சிறுகதைகள்” என்ற தலைப்பில் வெளி வந்தது. இவற்றோடு, முன்னர் குறிப்பிட்ட ப. ராமசாமி (ப.ரா.), மாக்சிம் கார்க்கியின் உலகப் புகழ் பெற்ற நாவலைச் சற்றே சுருக்கப்பட்ட வடிவில் தமிழாக்கி “அன்னை” என்ற தலைப்பில் 1946-ல் வெளியிட்டார். இந்த வெளியீடு அந்தக் காலத்தில் குறிப்பிடத்தக்கதோர் நிகழ்ச்சியாக விளங்கியது. இதன் பின்னர் அவர் “அன்னை” நாவலை நாடக வடிவிலும் தயாரித்தார்; நாற்பதாம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தயாரான இந்த நாடகம், திருநெல்வேலியில் மேடையில் அரங்கேற்றமாகிப் பலமுறை நடைபெறவும் செய்தது.


இந்திய சுதந்திரத்திற்குப் பின்னால்...

1947 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே ராஜீய உறவுகள் நிறுவப்பட்ட பிறகும், 1947 ஆகஸ்டு மாதத்தில் இந்தியா சுதந்திரமடைந்த பிறகும், சோவியத் யூனியனைப் பற்றிய புத்தகங்களும், சோவியத் எழுத்தாளர்களின் நூல்களும் தமிழில் வெளிவருவது மிகமிக அதிகரித்தது. மாக்சிம் கார்க்கியின் “தாய்” நாவலின் முழுமையான மொழிபெயர்ப்பும் மற்றும் நிக்கொலாய் ஆஸ்திரோவ்ஸ்கி, மிகாயில் ஷோலகோவ், இலியா இரென்பர்க், அலெக்சி டால்ஸ்டாய் முதலியோரின்

43