பக்கம்:அங்கும் இங்கும்.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

நாட்டில் எல்லாரும் எழுத்தறிவு பெற்றவர்கள்’ என்று பெருமிதம் கொள்கின்றனர். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டல்லவா? இது மனமுண்டானால் இடமுண்டு என்பதையும் காட்டுகிறது இது.

“எய்தற் கரியது இயைந்தக்கால் அங்நிலையே
  செய்தற் கரிய செயல்”

என்ற குறள் இலக்கணத்திற்கு இக்கால இலக்கியமாக விளங்குவது, சோவியத் நாட்டின் எழுத்தறிவிப்பு இயக்கமாகும்.

‘பசி நோக்காது, கண் துஞ்சாது, செவ்வி அருமையும் பாராது, கருமமே கண்ணாயிருந்து’ முதியோர்க் கெல்லாம் எழுத்தறிவு ஊட்டினார்களே. அது எவ்வளவு தூரம் பச்சென்றிருக்கிறது ? அறிவுப்பயிர் பச்சென்றிருப்பதற்கு அடையாளங்கள் எவை ? இருது அடையாளங்களை நாம் அறிந்தோம்.

முதல் அடையாளம் அம்முதியோர்களின் தொடர் கல்வி. கனவுகூட காணாத எழுத்தறிவு எப்படியோ கிட்டிவிட்டது. இது போதுமே’, என்று அங்குள்ள முதியோர் இல்லை. ஆணாயினும் சரி, பெண்ணயினும் சரி, மூன்று நான்கு திங்களில் பெற்ற எழுத்தறிவின் துணை கொண்டு மேலும் படித்தனர். ஏழெட்டு மாதங்களில் நன்றாகப் படிக்கக் கற்று கொண்டனர். பின்னரும் தொடர்ந்து படித்து எட்டாவது, பத்தாவது தேறிய முதியோர்களை ஏராளமாகக் காணலாம்.

“பாட்டாளிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதாதா? என்று கருதுவதில்லை. வெறும் பாட்டாளியாகத் தொடங்கிய முதியோர், நுட்பத் தொழிலாளியாக, நிபுணராகத் தகுதி தேடிக் கொண்டு உயர்வது அந் நாட்டில் சாதாரணமாகக் காணக் கூடியது.