பக்கம்:அங்கும் இங்கும்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

நம்மைப்போல, எதிலோ பெற்ற மார்க்குகளைக் காட்டியல்ல. 'வாய்ச்சாங் கொள்ளிதனத்திற்காக'வுமல்ல. ஆகவே, சோவியத் நாட்டில் சாதித்துக் காட்டும் செயல் விஞ்ஞானிகளைக் காண்கிறோம். மதிப்பெண்களையே கடவுளாக்கி விட்ட நாமோ, பட்டத்தின் மேல். பட்டத்தை அடுக்கிக் காட்டும் சொல் - விஞ்ஞானிகளையே பெறுகிறோம்.

சமதர்மத்தில் மேதைகளை வளர்ப்பதற்கு வழியேது என்ற ஐயம், 'மேதைகள்’ என்று தமக்குத் தாமே பட்டம் சூட்டிக்கொண்டுள்ள பலருக்கும் எழுவதுண்டு. எனக்கும் எழுந்ததுண்டு. எல்லாரும்-எல்லாருமென்றால் எல்லாருமே, சமாளிக்கும் நிலைக்கும் இறங்கி வந்து கல்வித் திட்டம் அமைத்து, பொதுக்கல்வியை எல்லாருக்கும் அளித்துவிட்டு தனித்திறமை உடையவர்களை அந்தந்தத் துறையில், அதிகம் கற்க. மேலும் மேலும் கற்க அவரவர் வேகத்திற்கு ஊக்குவதும், அதற்கான எல்லா வாய்ப்புகளையும் வசதிகளையும் தாராளமாகச் செய்து தருவதுமே, மேதைகளையும் அறிவு மலைகளையும் சாதனைப் பெரியவர்களையும் பெருக்குவதற்கு வழி என்பதை உணர்ந்தோம்; எங்கள் ஐயம் அகன்றது.

வாய்ப்புகள் என்றதும் அமெரிக்கக் கல்வி முறையில் கண்டது நினைவிற்கு வருகிறது. அந்நாட்டில், ஆதியில் அரசினால், உள்ளாட்சி மன்றங்களால். ஊராட்சிகளால் கல்விக்கூடங்கள் தொடங்கப்படவில்லை. இங்கும் அங்கும் தொடங்கப்பட்ட கல்விக்கூடங்கள்-லெளகீகக் கல்விக் கூடங்கள்-மதச்சபைகளின் சார்பில் தொடங்கப்பட்டன. பின்னர் தனியார் பலர், முடிந்தால் தனித்தனியாகவும், முடியாத போது பலர் சேர்ந்தும், கல்விக்கூடங்களை அமைத்தனர் : நடத்தினர். இன்றும் நடத்துகின்றனர். நாளையும் நடத்துவர். தனியார் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் அரசினரின் உதவி கிடையாது. அரசின் கல்வி உதவி, அரசினர் கல்விக்கூடங்களுக்கே விஞ்ஞான வளர்ச்சிக்கென்று மட்டும் சில ஆண்டு