பக்கம்:அங்கும் இங்கும்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

நூல்களை மிக மலிவாக வெளியிட எப்படி முடிகிறது? அரசினர், ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்தி இலவசமாக எழுதி வாங்கிக் கொள்வதாலா? அல்லது பெயரளவில் ஏதோ சொற்பத் தொகை கொடுத்து மலிவாக கையேடுகளைப் பெறுவதாலா? அல்லது நூல் வெளியீட்டுத் தொழிலாளிகளுக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதாலா? எந்த உபாயங்களைக் கைக்கொண்டு விஞ்ஞான நூற்களைக்கூட மலிவாக விற்கிறார்கள் என்று கேட்டோம்.

காரோட்டி பதில் கூறுவதற்கு முன், மொழிபெயர்ப்பாளர் பதில் கூறினார்.

" இந்நாட்டில் நூலாசிரியர்களுக்கு நல்ல ஊதியம். உயர்ந்த 'இராயல்டி,' வெளியீட்டு வேலைக்காரர்களுக்கும், மற்ற வேலைகளில் உள்ளது போன்றே நல்ல சம்பளமே"

பதில் முடியவில்லை. இதற்குள் எங்களில் ஒருவர்- நானல்ல - குறுக்கிட்டார்.

"அப்படியானால் எப்படித்தான் இந்த அற்புதம் நிகழ்கிறது?" என்று வியப்புடன் வினவினார்.

" இதில் அற்புதம் ஒன்றுமில்லை. நூல் வெளியீடு இங்கு ஒரு வாணிபமல்ல; மக்களது படிப்புப் பசியைப் பயன்படுத்தி தனியார் யாரும் நூல் வெளியிட்டு, வாணிகம் செய்து குவிக்க முடியாது. நூல் வெளியீட்டுப்பணி, பொதுத்துறையில் உள்ளது நூல் வெளியீட்டிற்காக, ஒவ்வொரு குடியரசிலும் பொதுத்துறை அமைப்பு உண்டு. அவை அரசினரால் அமைக்கப்பட்டாலும் தன்னுரிமை பெற்றவை. பல்துறை மேதைகளைக் கொண்டவை. இலாபக் கண்ணொட்டம் அற்றவை.

" ஆகவே ஒவ்வொரு நூல் வெளியீடும் கட்டுபடியாக வேண்டுமென்ற குறியோடு விலை போடவேண்டிய நிர்ப்பந்தம் அற்றவை. வெளியிட்ட பல நூல்களுக்கும் சேர்த்து,