பக்கம்:அங்கும் இங்கும்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

33

அறுபது மொழிகளில் உள்ளனவென்றார் நூலகத்தைச் சேர்ந்தவர். பளிச்சென்று கொடுக்கும் இப்பதிலில், உண்மை எவ்வளவோ, 'திறமை' எவ்வளவோ என்ற ஐயப்பாடு மின்னிற்று. எனவே என்னென்ன மொழிகளில் என்று மேலும் சோதித்தோம். அந்த நூற்று அறுபது மொழிகளின் பட்டியலையே எடுத்துக் கொடுத்துவிட்டார்.

தமிழ் மொழி இடம் பெற்றுள்ளதா என்று துழாவினேன்; நம் தமிழ் மொழியும் பட்டியலில் இருந்தது. அங்குள்ள தமிழ் நூல்களும் சஞ்சிகைகளும் நம்முடைய அன்பளிப்பல்ல. விலை கொடுத்து வாங்கியவை என்று அறிந்து மகிழ்ந்தேன்.

லெனின் நூலகம், வெறும் நூலகமாக மட்டும் பணியாற்ற வில்லை. பத்திரிகைப் படிப்பகமாகவும் பணியாற்றுகிறது என்று தெரிந்து கொண்டோம்.

அங்குப் பல மொழிச் செய்தித்தாள்களும், வார இதழ்களும், மாத மலர்களும் இருந்தன. பொது நூலகத்தில் பத்திரிகைப் படிப்பகமும் இருக்க வேண்டுமா என்ற என் கேள்விக்கு, 'பொது நூலகத்திலிருந்து விரட்டப்பட வேண்டியவை அல்ல, செய்தித்தாள்களும் சஞ்சிகைகளும்' என்று பதில் கிடைத்தது இத்தகைய பொது நூலக வசதி, மாஸ்கோவில் மட்டுமா ? பிற பகுதிகளில் உண்டா ? பொதுநூலக வசதி, நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் உண்டு. நான்கு இலட்சம் பொது நூலகங்கள் அன்று இருந்தன.

லெனின் நூலகத்தில் தமிழ் சஞ்சிசைகள் இருக்கும் பகுதியைக் காண விழைந்தேன். அங்கு அழைத்துச் சென்றார்: மேசைகளின் மேல், சில தமிழ்ச் சஞ்சிகைகள் இருந்தன. அவை ஏற்கனவே, அறிமுகமானவை. அவை, பொது உடைமைக் கொள்கைச் சார்புடையனவல்ல. என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. நம் நாட்டு முதலாளித்துவ சஞ்சிகைகளே அவை.