பக்கம்:அங்கும் இங்கும்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

பொருத்தது. அங்கு நாங்கள் கண்டவை சில. அவற்றில் ஒன்று ‘ஹைட் பார்க்’ என்ற பூங்கா. அது இலண்டனுக்கு, வெளியிலோ, அடுத்தோ இருக்கும் பூங்கா அல்ல. நகருக்கு உள்ளே இருக்கும் பூங்கா. பரவலான பூங்கா. மெய்யாகவே மிகப் பரவலான பூங்கா.

எட்டுக்கு எட்டு மீட்டரில். எங்கோ ஒரு மூலையில், கட்டப்படாமலிருக்கும் பொட்டலுக்கு, நாம் ‘பூங்கா’ என்று அருமையாகப் பெயரிட்டு விடுகிறோமே. அப்படிப்பட்ட பூங்கா ‘ஹைட் பார்க்.’ பல கிலோ மீட்டர் நீளமும் பல கிலோ மீட்டர் அகலமும் உடையது. புல் தரைகளும் பெரு மரங்களும் அடர்ந்தது. நெடுங் காலமாக அழிக்கப்படாமல், சிதைக்கப்படாமல் காப்பாற்றப்படுகின்றது. உலாவ ஏற்ற இடம் ; நிழலிலே ஒய்ந்திருக்க ஏற்ற இடம் இத்தனையும் எங்களைக் கவர்ந்தன. இம்முறைகளிலும் அதைப் பயன்படுத்தினோம் நாங்கள்.

இவற்றிற்கு மேலான சிறப்பொன்றும் உண்டு அப் பூங்காவிற்கு. அதுவென்ன ? பேச்சுரிமையைப் பெற்ற களம் அது. பேச்சுரிமையைக் காக்கும் களம் அது.

பிரிட்டன் கோனாட்சி நாடு. கோனாட்சி பெயரளவில் தான், மெய்யாக நடப்பது மக்களாட்சி.

அந்நாட்டை முற்காலத்தில் ஆண்ட மன்னர்களில் சிலர், கோனாட்சியைக் கோலாட்சியாக, கொடுங்கோல் ஆட்சியாக ஆக்கிவிட்டனர். அவர்கள் நினைத்தற்கு மாறாக, யாரும் மூச்சுவிடக்கூடாது. 'கப்சிப்' தர்பார் நடத்த முயன்றனர் பலித்ததா ? இல்லை.

அடக்குமுறை, கடுமையான அடக்குமுறை நேர்மாறான விளைவையே கொடுக்கும். ஆங்கிலேயப் பொதுமக்களும் கொதித்து எழுந்தனர் : எதிர்த்து முழங்கினர்; அரசின்