பக்கம்:அங்கும் இங்கும்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

செறிந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். நீக்குப் போக்கிற்கு இடமின்மையை விளக்கினார். உடன் இருந்து கவனித்த செம்பியன், நிலைமையை உணர்ந்து கொண்டார். பிறிதொரு முறை அத்தகைய நல்வாய்ப்பினை எதிர்பார்ப்பதாகக் கூறினார். வகுப்பிற்கு நேரமாகி விட்டதால் வணக்கம் கூறி விடை பெற்றுக் கொண்டார்.

இதே செம்பியன்தான் - ரூதின்தன் - பின்னர், சென்னைக்கு வந்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்றவர். கர்ம வீரர் காமராசரோடு, அவரது இரஷியப் பயணத்தில், மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிவரும் இவரே.

நாங்கள் உணவருந்தச் சென்றோம். மனிதர்களிலே சிலரைத் தீண்டாதவர்களாகக் கருதி வந்த நம் மக்கள், பழக்கக் கொடுமையால், இக்காலத்தில் மொழிகள் சிலவற்றின் மேல் அத்திண்டாமைப் போக்கைத் திருப்புகிறார்களே என்று ஏங்கினோம். தீண்டாமை மக்கள் இடையே கூடாது, என்று கருத்தைத் தெளிந்தோம். கற்ற மொழிகளெல்லாம் நம் சொந்த மொழிகளாகி விடும். அவை பிறந்த நிலத்தார், தனி உரிமையோ கொண்டாட முடியாது. புதிதாகக் கற்ற அந்நியரை, அம் மொழியைப் பயன்படுத்துவதிலிருந்து தடுக்க முடியாது.

இப்படிச் சென்றுகொண்டிருந்தது எங்கள் சிந்தனை. பின்னர், அவ்வூரிலேயே தாங்கள் பெற்ற பட்டறிவு எங்கள் சிந்தனைக்குச் சிறகுகள் பல தந்தது. உயர்நிலைப்பள்ளி யொன்றில் ஆங்கிலத்தின் மூலம் பல பாடங்களையும் கற்றுக் கொண்டிருந்தார்கள். அதை நாங்கள் கண்டோம். பள்ளிகள், ஆங்கிலத்தை அந்நிய மொழியாகக் கற்றுக் கொடுப்பதை முன்னர் கண்டது. உண்டு. இங்குத்தான் அந்த அத்திய மொழியைப் பாட மொழியாகவும் பயன்படுத்துவதைக் கண்

அ. இ -4