பக்கம்:அங்கும் இங்கும்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

ருந்தனர். அவை தேர்ச்சி பெற்றவரால் கழுவப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.

ஒரு மாணவர், தான் எடுத் படமொன்றை குைப்பு முழுவதற்கும் காட்டினார். எல்லோரும் சில விநாடிகள் கவனித்தனர். அது போர்டில் மாட்டப்பட்டிருந்தது. அதை ஆசிரியர் மதிப்பிடவில்லை. சக மாணவர்களை மதிப்பிடச் சொன்னார்.

அதில் 'போகஸ்' சரியாக இல்லை என்று எனக்குத் தோன்றிற்று. என்னைக் கேட்டிருந்தால் அப்படியே சொல்லியிருப்பேன். ஆனால் அதைப் பற்றிக் கூறின மாணவர் என்ன சொன்னார் தெரியுமா? " 'போகஸ்' இன்னும் சிறிது வலப்புறம் வந்திருந்தால் படம் அருமையாக இருக்கும்” என்று மதிப்பிட்டார். இன்னொருவ 'இன்னும் சிறிது நேரம் 'எக்ஸ்போஸ்' செய்திருந்தால் படத்தின் தெளிவு அதிகமாயிருக்கும்" என்று குறிப்பிட்டார். இப்படி, இன்னும் இரண்டொருவர்,' இதை இப்படிச் செய்யலாம்; இன்ன பலன் அதிகமாகும்' என்று மதிப்பிட்டார்கள்.

யாருமே எதிர்மறைவில் பேசவில்லை. குற்றஞ் சாட்டவில்லை. போகஸ் சரியில்லை, 'எக்ஸ்போஸர்' போதாது என்று குறை காட்டிப் பேசாமல் இதை இப்படிச் செய்ய வேண்டும்; இது இன்னும் அதிகம் தேவை" என்று மட்டுமே வழி காட்டினர். தெளிவான வொரு கருத்தை ஆக்க முறையில் சொன்னதால் ஏற்றுக் கொள்வதைப் பற்றி மற்றவர்களும் கருத்துத் தெரிவித்தார்கள். கருத்துப் போர் நிகழவில்லை.கருத்து வளர்ச்சி நிகழ்ந்தது. இம்முறையில், அவர்கள் பயிற்சி வளரக் கண்டேன்.

உள்ளது சிறக்க வழிகூறும் முறையை, இங்கிலாத்தின், மற்ற கல்விக்கூடங்களிலும் கண்டேன். தொடக்கப்பள்ளியிலுஞ்சரி உயர்நிலைப் பள்ளியிலும் சரி. குறை காண்பதை விட| நிறைவுக்கு வழி சொல்வதே அங்கு மரபு, இங்கு ?