பக்கம்:அங்கும் இங்கும்.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82



‘கல்லூரிக்கு எப்படியோ வந்துவிட்டார்களே ! நமக்குத் தெரிந்தைச் சொல்லிப் பார்ப்போம்’ என்று நினைக்கும் பேராசிரியரா? அவரும் இல்லை.

கல்வி ஆய்வாளர்களா? கல்வித் துறைப் பெரியவர்களா? இல்லை. கல்வித் துறையினரல்ல, மேற் கூறிய அற, ஊக்க உரையை வழங்கியது. பின் யார் ?

“வறுமைப் பாதாளத்தில் வாடி, அறியாமைக் காரிருளில் நடுங்கி, கொத்தடிமைப் பிழைப்புப் பிழைத்து வந்த கோடானு கோடி மக்களுக்குப் புது வாழ்வு தந்த, புது யுகம் அமைத்த எங்கள் தலைவர் காட்டினார் இந்த இலட்சியத்தை” என்று பக்திப் பரவசத்தோடு கூறினார் சோவியத் கல்வியாளர்.

அத்தலைவர் யாரோ ? என்ன பேரோ ?

“அவர் லெனின் ; தோழர் லெனின்; சோவியத் நாட்டின் தந்தை லெனின் பெரியார் லெனின்” இவ்வகையிலே லெனினைப் பற்றிக் கூறக் கேட்டோரம்.

'படி, படி, படி' என்கிற இலட்சியத்தை யாருக்குக் கொடுத்தார் ? ஒரு பிரிவினருக்கா கொடுத்தார் ? இல்லை ! பலருக்கா கொடுத்தார் ? இல்லை. பல பிரிவினருக்கா கொடுத்தார் ? ஆம் அப்படியே.

மாபெருந் தலைவர் எச்சந்தர்ப்பத்தில் இப்படிக் கூறினார் தெரியுமா ?

பல்லாண்டுகளுக்கு முன், சோவியத் ஆட்சி அமைவதற்கு முன், பாட்டாளி ஆட்சிக்குத் திட்டம் தீட்டும் காலம், அது. இரகசியத் திட்டம் தீட்டும் காலம் பலப்பல குழுவினருக்குப் பலப்பல பொறுப்புகள் ஒதுக்கப்பட்ட மிக தெருக்கடியான காலம்.

அப்போது இளைஞர் சிலர், தோழர் லெனினை இரகசியமாகக் கண்டனர். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத்