பக்கம்:அங்கும் இங்கும்.pdf/91

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

நம் மக்கள் எண்ணிக்கை ஐம்பது கோடியை நெருங்குவது யாருக்குத் தெரியாது ! பின், எந்தநாட்டைப் பற்றிய தகவல் இது ? இதோ சொல்லி விடுகிறேன். என் மேல் கோபக் கனல் வீசாதீர்கள். சோவியத் நாட்டைப் பற்றிய தகவல் இது. அந்நாட்டிற்கு 1931 ஆம் ஆண்டில் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் எண்ணிக்கை இருபது கோடி. 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் மீண்டும் சென்று வர நேர்ந்தது. அம்மக்கள் எண்ணிக்கை இருபத்து மூன்று கோடியை நெருங்குவதைத் தெரிந்து கொண்டேன்.

மக்கள் பெருகப் பெருக, படிப்போர் எண்ணிக்கை வளர்ந்துகொண்டே இருக்கிறது. அந்நாட்டில் கல்வி வாய்ப்புக்களும் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டேயிருக்கின்றன.

‘கல்வி கற்பவர்கள்’ என்னும் சொற்றொடர் நம் மனக்கண் முன்னே யாரை நிறுத்தும்? ஐந்து வயதுச் சிறுவனை, சிறுமியை பத்து வயதுப் பையனை பெண்ணை, பதினெட்டு வயது காளையை கன்னியை நிறுத்தும். இருபத்தைந்து வயது இளம் தம்பதிகள் கற்போர்களாகக் காட்சியளியார். நமக்கு முப்பத்தைந்து வயது குடும்பிகள் மாணவ. மாணவிகளாகத் தோன்றுவதில்லை இங்கு. நாற்பத்தைத்து: வயதினரோ மாணவப் பருவத்தை விட்டு நெடுந்துாரம் விலகி விட்டவர் ; நாள்களை எண்ணிக் கொண்டிருப்பவர், நம் சூழ் நிலையில் ; மன நிலையில்.

‘மூன்றிலொருவர் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்’ என்றதும்,

“உங்கள் நாட்டின் மக்களில், மூன்றில் ஒருவர், பள்ளி வயதினரான பாலர்களும், சிறுவர்களும், இளைஞர்களும், வாலிபர்களும் என்று பொருளா ?” என்னும் ஐயத்தைக் கிளப்பினோம்.