பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/101

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

பாப்ரு சாஸனம்

89


(1) வினய ஸமுகஸே1.
(2) அலியவஸானி. (பெரியோரின் நடக்கை.)
(3) அநாமதடியாநி. (வரப்போவதைக் குறித்துள்ள பயம்.)
(4) முனிகாதை (முனிவரின் கீதங்கள்.)
(5) உபதிஷ்யன் கேள்விகள் 2.
(6) மோனேயஸூதே (முனிவர்களின் வாழ்க்கையைப் பற்றிய சம்பாஷணை.)
(7) அநித்தியம் முதலிய கொள்கைகளைப் பற்றி ராஹுலனுக்குள்ள உபதேசம்.

பகவான் புத்தரால் கூறப்பட்டுள்ள இவைகள் எல்லாவற்றையும், புண்ணியவான்களே, பிக்ஷுக்களும் பிக்ஷுணிகளும் அடிக்கடி கேட்டு மனனம் செய்யவேண்டும் என்று என் விருப்பம்; அப்படியே இல்லறத்திலுள்ள ஸ்திரீ புருஷர் களும் இவற்றை அடிக்கடிக் கேட்டு மனனம் செய்ய வேண்டும். புண்ணியவான்களே, இக்காரணம் பற்றியே-அஃதாவது, ஜனங்கள் எனது கோரிக்கையை அறியும் பொருட்டே - இதை நான் வரையச் செய்தேன்.

மொத்தம் 9 வாக்கியங்கள்.

புத்தரது சுயவாக்கியங்களுக்கு ஸத்தர்மம் என்று பெயர். “ஸத் தர்மம் சாசுவதமாய் நிலை நிற்கும்” என்பது பௌத்தர்களுக்கு மஹா வாக்கியம் போன்ற ஓர் வாக்கியம். அங்குத்தர நிகாய Iv.

1. இவ்வேழு பெயர்களும் பௌத்தருடைய ‘திரிபிடகம்’ என்ற பிரபந்தத் தொகுதியில் வரும் பாகங்களைக் குறிக்கின்றன.