பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

சாஸனங்கள்

செய்து வருகின்றனர். வயது சென்றவராதலாலோ, அல்லது பிள்ளை குட்டிகளுடையவராதலாலோ, அல்லது குற்றமில்லாதவ ரென்று மதிக்கப்படுவதாலோ, கைதிகளையும் குற்றவாளிகளையும் விடுதலை செய்ய சிபார்சு செய்து அவர்களைக் கவலைகளிலிருந்து நீக்கி இவர் பிரவிர்த்தித்து வருகின்றனர். பாடலிபுரத்திலும், புறமேயுள்ள பட்டணங்களிலும், அந்தப்புர ஜனங்களிடையும், சேவகரிடையும், சகோதர சகோதரிகளிடையும், மற்ற உறவினரிடையும் இவர் பிரவிர்த்தித்து வருகின்றனர். எனது ராஜ்யத்தின் எல்லாப் பாகங்களிலும் தர்ம காரியங்களை மேற் பார்க்கவும் தர்மத்தை ஸ்தாபிக்கவும் தர்ம விஷயங்களைக் கவனிக்கவும் 2 தானங்களை நடத்தவும் இவர் பிரவிர்த்தித்து வருகின்றனர். இவ்வேற்பாடு வெகுநாள் நீடித்து நிற்கவும் எனது பிரஜைகள் இந்த ஏற்பாட்டை எந்நாளும் பின்பற்றவும் இந்த தர்மலிகிதம் எழுதப்பட்டது.

மொத்தம் 15 வாக்கியங்கள். இச்சாஸனத்தில் பொருள் விளங்காத பலசொற்கள்வருகின்றன. 12-வது வாக்கியம் உள்ளவற்றில் மிகக் கடினமாயிருக்கிறது. அங்கு படிவியானய (சீபார்சுசெய்ய?) கதாஹிகாரேஸு (குற்றமற்றவர்பால்) முதலிய பதங்களுக்குச் சரியான கருத்து இனிமேல் தீர்மானமாகவேண்டும். பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் கருத்தை மொழிப் பெயர்ப்பில் எழுதுகிறோம்.

1. அரசனால் செய்யப்பட்ட நற்கருமங்கள் ஏழாம் ஸ்தம்பசாஸனத்தில் எடுத்துரைக்கப்படுகின்றன. தர்மமகாமாத்திரரின் வேலையைப்பற்றி இங்கும் கூறப்படுகிறது.