பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

சாஸனங்கள்

102

6. ஊக்க முடைமை.

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் இப்படிச் சொல்லுகிறான். எல்லா வேளைகளிலும் ராஜகாரியங்களைக் கவனிப்பதும் விசாரணைகளைத் தானாக நடத்துவதும் வெகுகாலமாக நடைபெறவில்லை. இப்பொழுது எனது ஏற்பாடு பின்வருமாறு, எல்லா நேரங்களிலும் போஜன காலத்திலோ, அந்தப்புரத்திலோ சயன அறையிலோ, (யானை குதிரைகளின்) லாயங்களிலோ,ஸாரத்தியம் செய்து கொண்டிருக்கும்பொழுதோ,உத்தியான வனத்திலோ,எங்கும் ஜனங்களின் வழக்குகளை எனக்கு அறிவித்து நியாய விசாரணைசெய்ய பதிவேதகர் இருக்கின்றனர். சகல ஜனங்களுடைய காரியங்களையும் நான் கவனிக்கிறேன். வாய்மொழியாக அல்லது வேறுவிதமாக நான் ஓர் உத்தரவிட்டாலும், அல்லது அதிக அவசரமான செய்தி யொன்று மகாமாத்திரருக்கு அனுப்பவேண்டுமென்றாலும், அதிகாரிகளின் பரிஷத்தால்(கூட்டத்தால்) தீர்மானிக்கப்பட்ட வழக்கொன்றை திரும்ப விசாரணை செய்ய வேண்டு மென்றாலும் கொஞ்சமும் காலதாமதமின்றி விஷயங்களை உடனுக்குடன் எனக்கு அறிவிக்க வேண்டும். இதுவே எனது ஆக்ஞை. எனது ஜாக்கிரதையிலும் அரசாட்சி விஷயமான ஊக்கத்திலும் நான் ஒருபோதும் திருப்தி யடைகிறதில்லை. நான் சகல ஜனங்களுடையவும் நன்மையை